- எம்.கே.திருப்பதி, திருப்பூர்
தீபாவளி
தேசத்தின் திருவிழா
பாரதம் இன்று
புத்தாடை புனையும்
இரும்பு இதயங்களும்
இளகி இணையும்
பட்டாசு புகையில்
பாரதம் நனையும்
பகல் நேர பட்டாசு
பகலவக் குஞ்சுகள்
ராக்கால பட்டாசு
நட்சத்திரக் கூட்டங்கள்
எண்பதுகளின் தீபாவளி
எண்ணை பிசிக்கில் தொடங்கி
இறுதிப் பதார்த்த
எச்சிலில் அடங்கும்!
இன்றைய தீபாவளி
இல்லங்களை விட
இனிப்பகங்களில் வாழும்!
இற்றை நாளில்
வழிபாட்டில் சிலரும்
வழி நீர் வழியும்
வழுக்கிடத்தில் சிலரும்
பொதும்பரில் சிலரும்
பொருந்துவர்

பட்டாசு
இளமை முதுமை
இருமுகக் கவர்ச்சி
சுட்டிக் குழந்தை முதல்
கட்டில் தாத்தா வரை
கரை மீறும் எழுட்சி!
நன்னாளில்
நண்டுஞ் சிண்டுகளும்
சின்னஞ் சிறுசுகளும்
வண்ணத்துப் பூச்சிகளாய்
வானத்தில் சிறகடிக்கும்
இல்லா மாக்கள்
இரவல் வாங்கியும்.
கைமாத்து கைக்கொண்டும்
காரிய மாற்றுவர்
கடவுளை போற்றுவர்!
பூமிப்பந்தின்
புண்ணிய விழா
சாமியோடும் பூமியோடும்
சம்பந்தப்பட்டது
வானில் அமாவாசை
வீட்டில் விளக்கொளிகள்
முரண்களே வாழ்க்கை!
விளக்கேற்றுங்கள்
இல்லங்களிலும்
மற்றவர்
உள்ளங்களிலும்!
(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி. 98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன்)
தேசத்தின் திருவிழா.. தீபாவளி!
தீபங்கள் ஒளி சிந்த தீமைகள் விலக, இருளின் இமை மூடி அருள் வழி திறக்க.. தீபாவளி வாழ்த்துகள்
ஆசைகளைக் குறைத்து… அன்பை நிறைத்து.. நடுத்தரக் குடும்பத்தின் தீபாவளி!
Happy Deepavali மக்களே.. பட்டாசு சுட்டுச் சுட்டு போடட்டுமா.. பாதுகாப்பாக கொண்டாடுங்கள்!
தமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: 27 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
"பொய் வழக்கு...தில்லுமுல்லு அரசியல்!" – மன்னன் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜு கண்டனம்
கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு டிஸ்சார்ஜா? அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்
கோவை பெரியார் அறிவுலகத்தில் ஊழல்? எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் விளக்கம்
அதிமுக பிரமுகர் மன்னன் கைது: தவெக எம்எல்ஏ-விடம் ரூ.30 கோடி பேரம் பேசிய விவகாரத்தில் நடவடிக்கை!
{{comments.comment}}