மாட்டுப் பொங்கலும் மாடுபிடி விளையாட்டும்!
- க. முருகேஸ்வரி
கலித்தொகையின்
முல்லைக்கலியில்.....
காட்சியுற்ற காவிய விளையாட்டு!?
முல்லை நில மக்களின்
வீரம் போற்றும்........
முதன்மை விளையாட்டு !
சங்க காலத்
தமிழ்க்குடி
மக்கள்
மறம் போற்றும் ........
வீர தீர விளையாட்டு !
காதல் தலைவி கரம் பிடிக்க ..........
ஏறு தழுவி வீரம் காட்டும் ஏகாந்த விளையாட்டு !
மாடு பிடிக்கும் மாமனை
மறைந்து நின்று
கரும்பு கடிக்கும் விதத்திலேயே காதல் சொல்லும்
இது வாலிப விளையாட்டு
மாட்டை அடக்கி
மாப்பிள்ளை
ஆகிவிட்டேன் என.......
மணமகன்
மார்தட்டும்
மஞ்சுவிரட்டு விளையாட்டு!
அலங்காநல்லூர் பாலமேடு அவனியாபுரத்தில் ......
அவிழ்த்து விடும் அடங்கா காளைகளின்
திமில் பிடிக்க .....
கட்டுடல் காளையர்
துள்ளிக்கிட்டு வரும்.....
ஜல்லிக்கட்டு விளையாட்டு!
அடங்க மறுக்கும் காங்கேயம் காளைகளும்..........
புலி போல் சீறிடும்
புலிக்குளம் காளைகளும்........
இது
முரட்டுக்காளை விளையாட்டு!
(க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வயலாநல்லூர், பூவிருந்தவல்லி)