நவராத்திரி முதல் நாளில் 30,000 கார்கள் விற்பனை... மாருதி சுசூகியின் அசத்தல் சாதனை!
டெல்லி: நவராத்திரி முதல் நாளில் 30,000 கார்களை விற்பனை செய்து மாருதி சுசூகி சாதனை செய்துள்ளது.
ஜிஎஸ்டி வரிக்குறைப்பு எதிரொலியாக வாகன விற்பனை அதிகரித்துள்ளது. மத்திய அரசு வரி குறைப்பு செய்ததினால், கார்கள், பைக், வீட்டு உபயோகப்பொருட்கள், உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பு மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வரி விதிப்பு குறைவால் கார் நிறுவனங்கள் தங்கள் கார்களின் விலைகளை கணிசமாக குறைந்துள்ளது. அது குறித்த விலை பட்டியலையும் வெளியிட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. இதன் காரணமாக நேற்று நவராத்திரி முதல் நாள் என்பதால், டாடா மோட்டார்ஸ் நிறுனம் 10 ஆயிரம் கார்களை விற்பனை செய்துள்ளது. புதிய கார்களின் விற்பனை மட்டுமின்றி, பழைய கார்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.
அதேபோல், 30 ஆயிரம் கார்களை விற்பனை செய்து மாருதி நிறுவனமும் சாதனை படைத்துள்ளது. இந்த விற்பனை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹூண்டாய் நிறுவனமும் சுமார் 11 ஆயிரம் கார்களை நேற்று ஒரே நாளில் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.