தை மகள் பிறந்தாள்
- சிவ.ஆ.மலர்விழி ராஜா
தைமகளும் பிறந்து விட்டாள்
தரணியும் செழித்திடவே......
இல்லை என்ற சொல்லும் நீங்கிடவே
இல்லறம் நல்லறமாகிடவே.....
பந்தங்கள்
சூழ்ந்திடவே
பாசமும் பிணைந்திடவே......
ஆணவம்
அழிந்திடவே ஆரோக்கியம் நிறைந்திடவே........
அகங்காரம் மறைந்திடவே
அலட்சியமும் விலகிடவே......
துரோகங்கள் தொலைந்திடவே
வஞ்சகமும் நலிந்திடவே......
கோபங்களும் குறைந்திடவே
சுயநலமும் மறைந்திடவே......
வளங்களும்
பெருகிடவே ஏற்றங்கள்
அருளிடவே........
இறையருள் நிறைந்திடவே
கலைகள் பல தந்திடுவாள்
காவியமும்
படைத்திடுவாள்......
விரும்பிய வாழ்க்கை
அமைந்திடவே வேண்டும் வரம் தந்திடுவாள்.......
தைமகளை
வரவேற்று தரணிபோற்ற
வாழ்ந்திடுவோம்.......!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)