தை மாத தேய்பிறை சஷ்டி விரதம் சிறப்புகள்

Su.tha Arivalagan
Feb 07, 2026,04:22 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


விசுவா வசு வருடம் 2026 பிப்ரவரி ஏழாம் தேதி சனிக்கிழமை  தை மாதம் 24 ஆம் நாள் தேய்பிறை சஷ்டி  அனுஷ்டிக்கப்படுகிறது.


தேய்பிறை சஷ்டியில் விரதம் இருந்தும், விரதம் இருக்க இயலாதவர்கள் முருகனை மனதார நினைத்து வழிபடுவதனால் நீங்கா பிரச்சனையும் நீங்கும். பிரச்சினைகள் தேய்ந்து நன்மைகள் பெருகும்.


பௌர்ணமியை அடுத்து வரும் சஷ்டி  "தேய்பிறை சஷ்டி "என்று அழைக்கப்படுகிறது. சஷ்டி சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட காலக்கணிப்பு முறையாகும் 15 நாட்களுக்கு ஒரு முறை சஷ்டி தினம் வருகிறது. இது பொதுவாக திதி என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. அமாவாசை நாளுக்கும், பௌர்ணமி நாளுக்கும் அடுத்து வரும் ஆறாவது நாள் சஷ்டி திதி ஆகும். இன்று பௌர்ணமியை அடுத்து அமைந்துள்ள தேய்பிறை சஷ்டி திதி மிகவும் விசேஷமான நாள் ஆகும். குறிப்பாக இன்று முருகன் கோவிலுக்கு செல்பவர்கள் அபிஷேகப் பொருட்கள் முக்கியமாக இளநீர் மற்றும் தேன் வாங்கிச் செல்வது வழக்கம். இதனால் சுபிட்சம் பெருகும் என்பது ஐதீகம்.




முருகப்பெருமானை நினைத்து சஷ்டி விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களுக்கு  வருவாய் அதிகரிக்கும், குடும்ப அமைதி மன நிம்மதி அனைத்தும் தேடி வரும். 


திருமணத்தடை விலகும். திருமணம் ஆகி நீண்ட நாட்கள் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் வேண்டி விரதம் இருக்க முருகனே குழந்தையாக வந்து பிறப்பார் என்பது நம்பிக்கை.


வீடுகளில் முருகன் உருவச்சிலை அல்லது முருகன் படம், முருகன்வேல் வைத்து வழிபடுபவர்கள் மலர்களால் அலங்காரம் செய்து நெய் அல்லது நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி,பால், பழம் நைவேத்தியம் செய்து கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் பாராயணம் செய்வது சிறப்பு.விரதம் மேற்கொள்பவர்கள் மனதில் "ஓம் சரவணபவ" எனும் மந்திரத்தை உச்சரித்து கொண்டே இருப்பது சிறப்பு. மாமிசம்  உட்கொள்ளக் கூடாது. எளிமையான சைவ உணவுகளை உண்டு விரதம் மேற்கொள்ளலாம்.  திருப்புகழ், குமாரஸ்தவம், சண்முக கவசம்  படிப்பது சிறப்பு.


குமாரஸ்தவம் பாடல் :


குமாரஸ்தவம் என்பது முருகனுடைய சக்தி வாய்ந்த துதி ஆகும். ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளால் அருளப்பட்டது.இது கந்த புராணத்தின் சுருக்கம் என்றும் கூறப்படுகிறது. இது மிகவும் அற்புதமான துதி.தினமும் படிப்பவர்கள் வாழ்க்கை சிறப்பாக மாற்றும் பேராற்றல் மிக்க துதியாகும் இந்தக் 'குமாரஸ்தவம்  'என்பது நம்பிக்கை.


குமாரஸ்தவம் :


1. ஓம் ஷண்முக பதயே நமோ நமஹ.

2. ஓம் சண்முத பதயே நமோ நமஹ.

3. ஓம்  ஷட் க்ரீவ  பதயே நமோ நமஹ.

4. ஓம் ஷட் கிரீட பதயே நமோ நமஹ.

5. ஓம் ஷட் கோணபதயே நமோ நமஹ.

6. ஓம் ஷட் கோஷ பதயே நமோ நமஹ.

7. ஓம் நவநிதி பதயே நமோ நமஹ 

8. ஓம் சுபநிதி பதயே நமோ நமஹ 

9. ஓம் நரபதி பதயே நமோ நமஹ 

10. ஓம் ஸூரபதி  பதயே நமோ நமஹ 

11. ஓம் நடச்சிவ பதயே நமோ நமஹ 

12. ஓம்  ஷ டக்ஷர  பதயே நமோ நமஹ 

13. ஓம் கவிராஜபதயே நமோ நமஹ 

14. ஓம் தப ராஜ பதயே நமோ நமஹ 

15. ஓம் இகபர பதயே நமோ நமஹ 

16. ஓம் புகழ் முனி பதயே நமோ நமஹ 

17. ஓம் ஜய ஜய  பதயே நமோ நமஹ 

18. ஓம் நயநய பதயே நமோ நமஹ 

19. ஓம் ஓம் மஞ்சுள பதயே நமோ நமஹ 

20. ஓம் குஞ் சரி   பதயே நமோ நமஹ 

21. ஓம்  வல் லீ   பதயே நமோ நமஹ 

22. ஓம் மல்ல பதயே நமோ நமஹ 

23. ஓம் அஸ்த்ர பதயே நமோ நமஹ 

24. ஓம் சஸ்த்ர பதயே நமோ நமஹ 

25. ஓம் சஷ்டி பதயே நமோ நமஹ 

26. ஓம் இஷ்டி பதயே நமோ நமஹ 

27. ஓம் அபேத பதயே நமோ நமஹ 

28. ஓம் ஸு போதபதயே நமோ நமஹ 

29. ஓம் வியூஹ  பதயே நமோ நமஹ  

30. ஓம் மயூர பதயே நமோ நமஹ 

31. ஓம் பூதபதயே நமோ நமஹ 

32. ஓம் வேதபதயே நமோ நமஹ 

33. ஓம் புராண பதயே நமோ நமஹ 

34. ஓம் ப் ராணபதயே நமோ நமஹ 

35. ஓம் பக்தபதயே நமோ நமஹ 

36. உன் முக்தபதயே நமோ நமஹ 

37. ஓம் அகார பதயே நமோ நமஹ 

38. ஓம் உகார பதயே நமோ நமஹ 

39. ஓம் மகார பதயே நமோ நமஹ 

40. ஓம் விகாச பதயே நமோ நமஹ 

41. ஓம் ஆதி பதயே நமோ நமஹ

42. ஓம் பூதி பதயே நமோ  நமஹ 

43. ஓம் அமாரபதயே நமோ நமஹ 

44. ஓம் குமார பதயே நமோ நமஹ


மேலும் இது போன்ற சுவாரசியமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இருந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.