தை மாத சங்கடஹர சதுர்த்தி.. விநாயகரை வணங்கி இன்னல்கள் நீங்கி.. நலம் பெறுக!

Feb 05, 2026,01:18 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


20 26 பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி தை 22 ஆம் நாள் வியாழக்கிழமையான இன்று சங்கடஹர சதுர்த்தி அனுஷ்டிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி மிகவும் விசேஷமானது. இன்று அமைந்துள்ள சங்கடஹர சதுர்த்தியில் விநாயகப் பெருமானை வழிபட்டால் முழுமுதற் கடவுளான விநாயகர் நம் அனைவரது அனைத்து இன்னல்களையும் போக்கி, அளவில்லாத நன்மைகளை தருவார் என்பது ஐதீகம்.


"சங்கடஹர சதுர்த்தி"- பொருள்:


'துன்பங்கள் நீங்கும்' 'தேய்பிறை சதுர்த்தி- பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் திதி ' இன்று விநாயகப் பெருமானை வழிபடுபவர்களுக்கு அவரவர் செய்த கர்ம வினையின் பலனாக வரும் அனைத்து துன்பங்களும் நீங்கும். 

 இன்று விரதம் இருந்து மாலையில் விநாயகர் கோவிலுக்கு சென்று அருகம்புல் சாற்றி வழிபடுவது மிகவும் விசேஷம். 


நேரம்: சதுர்த்தி திதி பின்னிரவு 3: 11 மணி வரை உள்ளது. பிறகு பஞ்சமி திதி வருகிறது.




வழிபடும் முறை: காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து நீராடி இன்று  விநாயகருக்காக  விரதம் இருப்பேன் என்று மனதிற்குள் சங்கல்பம் செய்து   விரதத்தை மேற்கொள்வது மிகவும் விசேஷம்.


சிலர் இன்றும் நீர் கூட  அருந்தாமல் நிர்ஜலா(Nirjala) விரதம் மேற்கொள்கின்றனர். அவரவர் உடல்நிலைக்கு ஏற்றவாறு பால், பழம் அல்லது அவல் உட்கொண்டு விரதம் மேற்கொள்வார்கள்.


சந்திரோதய தரிசனம் : சந்திரோதயம் அதாவது சந்திரன் உதித்த பிறகு விநாயகருக்கு பிடித்தமான அருகம்புல், செவ்வரளி பூ,(மோதகம் Modak) கொழுக்கட்டை படைத்து சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு பிரசாதமாக படைத்த உணவை உட்கொள்வது சிறப்பு.


சங்கடஹர சதுர்த்தி நாளில் தான் சந்திர பகவான் விநாயகரை வழிபட்டு சாப விமோசனம் பெற்ற நாளாக கருதப்படுகிறது.


எனவே திருமண தடை, குழந்தை வரம் வேண்டுபவர்கள், தோஷங்கள் நீங்க,வேலை கிடைக்க,நல்ல படிப்பு, நல்ல கல்லூரியில் இடம் கிடைக்க,தொழிலில் ஏற்படும் தடைகள் விலக, அனைவரது கஷ்டங்களும் நீங்கி காரிய சித்தி,நல்ல ஆரோக்கியம் மற்றும் ஞானத்தை வழங்குவார் விநாயகர். இந்நன்னாளில் "விநாயகர் அகவல்" படிப்பது சிறப்பு.


விநாயகர் ஸ்லோகம்:


"வக்ரதுண்ட  ம ஹாகாய சூர்ய கோடி ஸ மப்ரபா நிர் விக்னம்  குருமே தேவா சர்வ கார்யேஷூ  ஸர்வதா" எவ்வித காரியத்தையும் தொடங்கும் முன் இந்த ஸ்லோகம் படிப்பது சிறப்பு.


"ஓம் ஸ்ரீம் மஹா  கணபதியே   நமஹ" என்பதை 108 முறை மனதில் ஜெபித்து  விநாயகரை வழிபடுவது எவ்வித பகை,கடன், நோய் ஆகியவற்றை நீக்கி பொருளாதார முன்னேற்றத்தை தரும்.


மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென்தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!

news

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்

news

தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து

news

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!

news

மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!

news

லார் கிப்பான் குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!

news

அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் போயிருக்கீங்களா.. மறக்காம போய்ட்டு வாங்க ஒரு வாட்டி!

news

Short Story by Sudha Thirunarayanan: காதல் 50!

news

"ஏம்மா.. சரி சரி".. கவிதை நடையில் கதை படிக்க வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்