ஆசை

Su.tha Arivalagan
Feb 16, 2026,11:55 AM IST

- க. யாஸ்மின் சிராஜூதீன்


ஆசையே  அலைபோல...

வாசமான  மலர்போல...

கார்மேகம் மழைபோல...

மனச பிடிச்ச வலையாலே 

முழுக்க படர்ந்த கொடிபோல 

ஒன்றிரண்டு என்றென்ன

ஆல்போல் தழைத்து 

அருகுபோல் வேரூன்றி 

ஆடம்பரம்  வீட்டில் ஆட




ஆசை  கோலம்தான் 

மிகவும்  பெரிசுதான் 

அளவுக்கு  மீறினால்

அமிர்தமும்

நஞ்சுதான்....

விரலுக்கேத்த வீக்கம்தான்...

பேராசை பெருநட்டம்தான்

பழமொழி அன்றே சொன்னதுதான்...

அடிபடும்முன்னே அறிந்திடு 

தேவைக்கு மட்டும் ஆசையே 

வெற்றுப்பகட்டு வேணாமே 

ஆசை அலை ஓயாதே !!!

பிறப்பு இறப்புக்கிடையிலே 

சிசு முதல் பரன்   வரையிலே...

 வேடம் பருவத்திற்கேற்பதான் 

கூடி வாழ ஆசைகொள்

நோயின்றி வாழ  ஆசைகொள் 

 பகிர்ந்து உண்ண ஆசைகொள் 

விட்டுக்கொடுக்க ஆசைகொள் 

அன்பாய் பேச ஆசைகொள்...

ஆசை நிறைய உண்டுதான் 

முடிவு என்பது இல்லைதான் ... 

வேண்டும் மட்டும் தேர்ந்தெடு 

ஆசை வாழ்க்கை வாழ்ந்திடு.


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)