அன்பர்கள் தினம்!

Feb 14, 2026,01:50 PM IST

- க. யாஸ்மின் சிராஜூதீன்


காதலர்கள் தினம் அல்லது வேலன்டைன் தினம் அல்லது அன்பர்கள் தினம் என பல பெயர்களைப்  புனைந்து உலகம் முழுவதும் அனைத்து உறவுகளும் அன்பை பரிமாறிக் கொண்டாலும்... 


முக்கியத்துவம் பெறுவது இளமைகளின்  காதல்தான்... 


இது குடும்பத்தை பாதுகாக்கும் அளவிலே  இருக்க வேண்டுமே தவிர நிலைகுலையச் செய்து விடக்கூடாது... 


பெற்றோர்களின் கனவுகள் பிள்ளைகளின் வளமான வாழ்க்கை மட்டுமே. படிக்கும் வயதில் தேவையற்ற சிந்தனை உன் சாதனையை பூஜ்ஜியமாக்கும்... நேரம் காலம் அது அதற்கென்று உள்ளது. அப்போது அது சரியாக இருக்கும்... 




உதிர்ந்துவிட்ட இலையை  எண்ணி மரம் அழுவதில்லை 

அதன் இலக்கு வளர்ச்சி மட்டுமே. 

இளைய தலைமுறைக்கு மட்டும்

காதல் தோல்வி என எண்ணுவது எதற்கு... 

தொட வேண்டிய சிகரங்கள் ஆயிரம் இருக்கு

காதல் என்பது படிக்கும் போது எதற்கு.... 

அன்பு செலுத்த நல் வழிகாட்ட குடும்பம் இருக்கு.... 

அன்பால்  தழைத்திடும்  உலகு 

அதில் தனிப்பட்ட நாள் என்பது சிறிது ....

அனுதினமும் ஒவ்வொரு நொடியும் என்பது போதாது ... 

அன்பால் உறவுகளை அரவணைப்போம்.. 

குடும்பம் தழைத்தோங்க.... 

காதலால் இல்லற வாழ்க்கையை அலங்கரிப்போம் ... 

மனக்கசப்புகளின்றி வாழ... 

காதலர்கள்  தினம் 

அனைத்து ஊயிர்களுக்கும் வேண்டும் தினம் தினம்....


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!

news

தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

news

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

news

ஜெம் கிரானைட் வீரமணி மீது மேலும் ஒரு பெண் புகார்: தீவிரமடையும் விசாரணை

news

Malliga Selvaraj Poem: கோலங்கள்!

news

கோவில்களில் காட்டப்படும் தீபாராதனைகளுக்கு விதம் விதமான அர்த்தம் இருக்கு தெரியுமா?

news

கிருஷ்ணர் ஏன் ராதையைக் காதலித்து ருக்மணியை மணந்தார் தெரியுமா?

news

Chennai Marina beach: 140 வருஷத்துக்கு முன்னாடி மெரீனா கடற்கரை எப்படி இருந்துச்சு தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்