காதலர் தினம் .. அதை ஏன் இன்று கொண்டாடுகிறோம் தெரியுமா?

Feb 14, 2026,01:47 PM IST

- கவிஞர் க. முருகேஸ்வரி


இன்று பிப்ரவரி 14 காதலர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.


கிபி 3 ஆம்  நூற்றாண்டில் ரோமானிய பேரரசர் இரண்டாம் கிளாடியஸ் இளைஞர்கள் இள வயதில் திருமணம் செய்து கொண்டால் போர்களில் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்று திருமணத்திற்கு தடை விதித்தார்.


இயற்கைக்கு புறம்பான அந்தத் தடையை‌ மீறி காதலர்களுக்கு மறைமுகமாக திருமணம் செய்து வைத்தார் புனித வாலண்டைன்‌‌ என்ற மதகுரு. 





இதனைத் தெரிந்து கொண்ட அரசர் புனித வாலண்டைனை  தூக்கிலிட்ட நாள் தான் பிப்ரவரி 14. அவரது நினைவாகவும் உண்மைக் காதலைப் போற்றும்‌வகையிலும் ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் வாலண்டைன்ஸ் டே காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.


தற்போது அனைவரும் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு தினமாக உருவெடுத்துள்ளது. பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 14 வரை காதலர் வாரமாகவும் கொண்டாடப்படுகின்றது. இந்த நாள்களில் பரிசுப் பொருட்களும் வாழ்த்து அட்டைகளும் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. 


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!

news

தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

news

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

news

ஜெம் கிரானைட் வீரமணி மீது மேலும் ஒரு பெண் புகார்: தீவிரமடையும் விசாரணை

news

Malliga Selvaraj Poem: கோலங்கள்!

news

கோவில்களில் காட்டப்படும் தீபாராதனைகளுக்கு விதம் விதமான அர்த்தம் இருக்கு தெரியுமா?

news

கிருஷ்ணர் ஏன் ராதையைக் காதலித்து ருக்மணியை மணந்தார் தெரியுமா?

news

Chennai Marina beach: 140 வருஷத்துக்கு முன்னாடி மெரீனா கடற்கரை எப்படி இருந்துச்சு தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்