மாதத்தில் சிறந்தது மார்கழி...!

Su.tha Arivalagan
Dec 18, 2025,10:16 AM IST

- கலைவாணி ராமு


கஷ்டங்களை 

கழி

இன்னல்களை

கழி

பழையன 

கழி

மனதை தெய்வீகமாக்க

உணர்வை 

உன்னதனமாக்க

வீதிகளில் 

வண்ண கலர் கோலம்...

மனதில் பக்தி

திருக்கோலம்

சூடி கொடுத்த

சுடர் கொடியாளை

கொண்டாடும்

மாதம்..




கள்ளன்

கண்னனை 

மலர் மாலையால்  கோதை மயக்கிய

மாதம்...

துளசி வாசம் வீசும் மாதம்..

சுந்தர வடிவில்

விடியும் தினமும் காலை பொழுது....

முற்றத்தில் தீப ஔி...

மொத்தத்தில் இம்மாதம் மங்கள கரமான

மாதம்.....

தேவர்களின் மாதம் இந்த மார்கழி மாதம்...

பீடை மாதம் அல்ல மார்கழி

பீடு (உன்னத) மாதம்....

திருமாலுக்கு உகந்த வைகுண்ட ஏகாதேசி வருவதும் மார்கழியில்.....

சிவனுக்கு ஆரூத்ரா வருவதும் மார்கழியிலே....

திருப்பாவையும், திருவெண்பாவையும் பாடப்படுவதும் மார்கழியிலே....

மகாபாரதம் ஆரம்பித்ததும்

மார்கழியிலே..

ஆயர்பாடியில்

கண்ணன் கோவர்த்தன கிரியை குடையாக்கி

மழையிலிருந்து

மக்களை காத்ததும் மார்கழியிலே....

மொத்தத்தில் மார்கழி மாதம்

முழுவதும் பக்தி பரவசம் தான்..

பக்தி பரவசத்தில் 

திலைப்போம்

பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு வாழ்வோம்


(கலைவாணி ராமு, புதுச்சேரியைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்)