மாயவனின் அருளோசை!

Dec 18, 2025,10:11 AM IST
- சிவ .ஆ.மலர்விழி ராஜா

அழகான 
மாதமிது

ஆண்டவனின் 
நேரமிது 

இதயத்தின் 
வாசலிலே

இறைவனின்
 காட்சி அது......

வெண் மேகம்
 பனியாக

வீதியெங்கும் 
மழையாக




சில்லென்ற 
பூங்காற்று 

சிலிர்க்க 
வைத்து சென்றாலும்.....

மெல்லிய 
பனி கூட 

மேனியை  
தொட்டாலும்........

வண்ண வண்ண 
மலர்கோலம்

வாசல் தோறும் 
மாக்கோலம்....

உள்ளத்தில் 
கமலம் போல்.....

திருமாலின் 
திருநாமம் 

பரந்தாமன் 
புகழ்மாலை

பாவையரின்
பாமாலை......!

அதிகாலை  
வேளையிலே.....

ஆலயத்தின்
 மணியோசை.....

ஆண்டவனின்    
 தோட்டத்திலே....

அழகான 
குயிலோசை.....

ஆடும் மயில்
அழகினிலே.....

அள்ளி வரும் 
பேராசை......


மாயவனின்  
அருளோசை......

(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்).
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தென்தமிழ் தலையங்கம்: உண்மைக்கு ஒரு நாள்.. செய்தித் துறையின் தர்மம் காப்போம்!

news

World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!

news

சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!

news

மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!

news

தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!

news

மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!

news

முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு

news

மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை

அதிகம் பார்க்கும் செய்திகள்