வயிறு பசிக்க ஆரம்பிச்சுருச்சா.. சுவையான பக்கோடா குழம்பு செய்யலாமா???

Feb 04, 2026,03:07 PM IST

- கவிஞர் க.முருகேஸ்வரி


லன்ச் வந்தாச்சு.. உங்க வீட்டுல என்ன ஸ்பெஷல் இன்னிக்கு.. எங்க வீட்டுல இன்னிக்கு சுவையான பக்கோடா குழம்புங்க.. அதுவும் மதுரை ஸ்டைல் குழம்பு.. கேட்டதுமே நாக்குல ஜலம் ஊறுதா.. சாப்பிட்டுப் பாருங்க, உசுரே சுகம் பெறும்.


சரி வாங்க எப்படி பண்ணலாம்னு பார்ப்போம்.


ஒரு வடை சட்டியில் கொஞ்சம் எண்ணெய் ஊத்திட்டு அதுல  கொஞ்சம் பெருஞ்சீரகம் போட்டுட்டு .. வேணும்னா ரெண்டு பிரியாணி இலையைப் போட்டு... அது கூட ரெண்டு ரெண்டா அறுத்து வச்சிருக்கிற சின்ன வெங்காயத்தை  கொஞ்சம் உண்டனப் போட்டு நல்லா வதக்கிட்டு அதுல ரெண்டு மூணு தக்காளிப் பழத்தை நல்லா அறுத்து அதையும் போட்டு சேர்த்து வதக்கிட்டு ரெண்டு பச்சை மிளகாயக் கீறி போட்டு இஞ்சி வெள்ளப்பூடு கொஞ்சம் அரைச்சு அதையும் சேருங்க.




அப்புறம் வேணும்ங்கிற அளவுக்கு தண்ணி ஊத்தி கல் உப்பு போட்டு குழம்பு மசாலாப்பொடிய  ரெண்டு கரண்டி போட்டு நல்லா கொதிக்க வச்சுட்டு நல்லா கொதி வந்ததுக்கப்புறம் கொஞ்சமா தேங்காயையும் நாலு அஞ்சு சின்ன வெங்காயத்தையும் போட்டு சேர்த்து வழுவழுன்னு அரைச்சு விடுங்க.


அதையும் கொதிச்சு வந்த குழம்பில் போட்டு சேர்த்துட்டு கொஞ்ச நேரம் கொதி வந்ததும் வாங்கி வச்சிருக்கிற பக்கோடாவ அதுல சேர்த்து ஒரு ரெண்டு நிமிஷத்திலேயே இறக்கி வச்சுட்டு...அதுல கடுகு... கறிவேப்பிலை பொடுசா நறுக்கின சின்ன வெங்காயம் போட்டு தாளிச்சு ஊத்திட்டு மூடி வச்சுட்டு கொஞ்ச நேரம் கழிச்சு திறந்து பார்த்தா மணக்க மணக்க சூடான சுவையான பக்கோடா குழம்பு ரெடி..!


இதை இட்லி தோசைக்கும்‌ ஊத்திக்கலாம்... சோத்துக்கும் சூப்பரா இருக்கும்.


இது மதுரை  வடகறி!!!!


சாப்பிட்டுப் பாருங்க.. அடுத்து இன்னொரு அதிரடியான டிஷ்ஷுடன் சீக்கிரமே வர்றோம்


படம் உதவி: https://www.youtube.com/watch?v=jwMLw027EG4

 

(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!

news

FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்

news

பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!

news

கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!

news

Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!

news

Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)

news

Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!

news

தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!

news

இன்னிக்கி ஒரு பிடி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்