வீட்டுச்சத்தம்!

Feb 04, 2026,01:42 PM IST
- க.யாஸ்மின் சிராஜூதீன்

வீட்டில் பாத்திரங்கள் 
இருக்குதான்  
சத்தம்  என்பது    
இயற்கைதான் 
உப்புக்கரைசலாக  
இருந்தாலே
தீர்வு   கிடைக்கும்    
தன்னாலே 



வண்ணக் கரைசலாக  
தெரிந்தாலே
பார்ப்போர் கண்ணை 
கவர்ந்திடும்
வீடு  இரண்டாய் 
உடைந்திடும் 
போர்க்களம் அங்கே 
கண்டிடும் 
நிம்மதி  எங்கோ 
பறந்திடும் 
உறவு  எல்லாம் 
முறிந்திடும் 
மனசெல்லாம்  
காயம்தான் 
ஆற ஆகும் 
நாட்கள்தான் 
நாட்கள் காற்றாய்
பறக்குதே 
உள்ளம் பனியாய் 
இருகுதே 
வேதனை மட்டும்
மிச்சம்தான் 
வாழ்க்கை ஒரு 
வட்டம்தான் 
வீம்பு  அதிலே 
எதற்குதான் 
விட்டுக்கொடுத்து 
வாழ்ந்திடு
கோடி  இன்பம்  
அடைந்திடு 
வீட்டில் இன்பம்  
தங்கிடும் 
சிரிப்பு சத்தம் 
மட்டும்தான் 
இனி உனக்கு 
சொந்தம்தான்
சொந்த பந்தம் 
சூழ்ந்தால்தான் 
வாழ்வில் சொர்க்கம் 
உனக்குதான்....!

(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக, அதிமுக, பாஜக கூட்டணி... வீரமணி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு கேள்வி.. முதல்வர் விஜய் விளாசல்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல் 2026 பிரச்சாரம்.. முதல்வர் விஜய் பேச்சு எப்படி இருந்தது?

news

Good Evening Friends: மாலை நேர ஸ்நாக்ஸ் 'மொறு மொறு துணுக்கு'!

news

தை பொறந்தது அத்தை அத்தை.. உந்தன் மடி என்றும் மெத்தை மெத்தை!

news

என்னைப் பார் யோகம் வரும்.. கழுதைக்கும் யோகத்துக்கும் என்னங்க சம்பந்தம்?

news

தேர்தல் கமிஷனர் பதவி விலகாவிட்டால் அக்., 2 முதல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான் ஜனதா கட்சி Warning!

news

Puzzle: அந்தாதி வினா விடை.. வர்றீங்களா விளையாடலாம்?

news

Nellai Special: வாழை இலை விருந்தும்.. நாவில் கரையும் திருநெல்வேலி சொதிக்குழம்பும்!

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்