அந்திக் கருக்கலில் ஒரு காவியம்
- புரட்சிப் பாவை தே.ஜெனிட்டா ரீனா
பொன்மாலைப் பொழுதில்...
மேற்கில் ஆதவனும், கிழக்கில் நிலவும்
நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டன!
இரவும் பகலும் கைகோர்க்கும்
அந்த இனிய சந்திப்பில் -
வெப்பமும் ஒளியும் சங்கமித்தன!
அனலும் குளிர்ச்சியும் அரவணைக்க,
வானம் ஒரு ஓவியமானது!
அந்த இயற்கையின் தூரிகையில் -
என் மனதில் ஒரு காவியம் பிறந்தது!
ஒரே வானில், ஒரே நேரத்தில்
இரு சுடர்களைக் கண்டபோது -
இயற்கையின் பேரழகு வியக்க வைத்தது!
மனித அறிவுக்கு எட்டாத ரகசியமாய்
இப்பிரபஞ்சம் நம்மை இயக்குகிறது.
இங்கே...
ஆன்மீகம் வெல்கிறதா? அல்லது அறிவியல் வெல்கிறதா?
விடை தேடினால்...
அது அவரவர் மனசாட்சி சொல்லும்
உன்னதமான ரகசியம்!
(தே. ஜெனிட்டா ரீனா MA.BEd.DTEd, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர். 17 வருட காலமாக ஆசிரியராக இருக்கிறார். பட்டிமன்றப் பேச்சாளராக, சிறுகதை, கவிதை, கட்டுரை, வகுப்பறை அனுபவம், நடிப்புத்திறன், பாடல் பாடுதல் போன்ற பன்முகத் திறமைகளுடன் வலம் வருகிறார்.).