அன்பெனும் பெருமழை!
- ப ந ராஜேஷ் கண்ணா
அன்பு என்னும் சொல்
மூன்றெழுத்தில் முடிவது.
அதன் உணர்வுகளை
எழுத்துக்களால்
அடக்கமுடியாது.
அன்பு கடலைப் போன்று
விசாலமானது.
அதன் அளவை
அளவிடமுடியாது.
மணற்கேணியைப் போன்று
ஊற்றெடுத்துக் கொண்டேயிருக்கும்.
அன்பை அனுபவிப்பதற்கு
மனதை விசாலப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அன்பென்னும் பெருமழையில் நனைந்து
மகிழ்ச்சி கடலில் மூழ்கி
திளைத்து இருப்பார்கள்.
விசாலமான பார்வையால் -
அன்பை மிகவும் ஆழமாக பார்க்க முடியும்!
அன்பை பலவகைகளில்
விவரிக்கலாம்!
எதையும் எதிர்பார்க்காமல் காட்டும் அன்பு!
எதையோ எதிர்பார்த்துக் காட்டும் அன்பு!
பெற்றோர் தம் பிள்ளைகள் மீது காட்டும் அன்பு!
முதியவர்கள் பேரக் குழந்தைகளின் மீது காட்டும் அன்பு!
இயற்கை பூமியின் மீது காட்டும் அன்பு!
பிள்ளைகள் பெற்றோர் மீது காட்டும் அன்பு!
அன்னை தன் பிள்ளைகள் மீது காட்டும் அன்பானது
இயற்கை பூமியின் மீது காட்டும் அன்பைப் போன்றதாகும்!
இரண்டுமே அளவில்லாமல் பொழிந்து மகிழ்ச்சி கடலில் திளைக்க வைக்கும்!
நீர் மேகங்கள் மேல் கொண்ட அன்பால்
சூரியன் காட்டும் அன்பு வானவில்லாக வெளிப்படுகிறது.
மலர்கள் மேல் கொண்ட அன்பால்
வண்ணத்துப்பூச்சிகள் காட்டும் அன்பு
அம் மலர்களை பூத்துக் குலுங்க செய்யும்!
வேர்கள் மேல் கொண்ட அன்பால்
பூமி தன்னுள் செல்ல அனுமதித்து பெரிய விருட்சமாக மாறச் செய்கிறது.
எப்படி அம்மா தன் பிள்ளைகள் மீது காட்டும் அன்பை அளவிட முடியாத அது போன்று அன்பைப் பற்றி மேற்கூறிய செய்திகளோடு நிறுத்தி விட முடியாது.
அது அள்ள அள்ள குறையாது
அனுபவிக்க அனுபவிக்க திளைக்காது.
இவை அனைத்தையும் எழுதுவதற்கு நான் எழுத்துக்கள் மேல் ,
தமிழின் மேல் கொண்ட அன்பால் மட்டுமே சாத்தியமானது!
ஆம் அன்பு என்பது பெரும்பாலும் பெரும் மழை தான் பெருமழை!
(ப ந ராஜேஷ் கண்ணா, பட்டதாரி ஆசிரியர், அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளி, திருவூர், திருவள்ளூர் மாவட்டம்)