பொழுதோ அதிகாலை.. மாதமோ மார்கழி.. நேரமோ அருள்தரும்.. மங்கையவள் கோலமோ பூங்காவனம்!

Su.tha Arivalagan
Dec 18, 2025,10:03 AM IST

- பாவை.பு.


பொழுதோ அதிகாலை.. 

மாதமோ மார்கழி..

நேரமோ அருள்தரும்.. 

மங்கையவள் கோலமோ பூங்காவனம்!


என்னங்க கவிதையா கொட்டுதேன்னு பார்க்கறீங்களா.. மார்கழி வந்தாச்சு.. பிறகு கவிதையும், கோலமும் வராமல் போகுமா என்ன.


மார்கழி மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது அதிகாலைக் குளிர், பக்திப் பாடல்கள் மற்றும் வாசலை அலங்கரிக்கும் பிரம்மாண்டமான கோலங்கள். தமிழ்ப் பண்பாட்டில் மார்கழி மாதக் கோலங்களுக்கு என்று ஒரு தனித்துவமான இடமும், அறிவியலும் உண்டு.


மார்கழி மாதத்தில் சூரியன் உதயமாவதற்கு முன்பே, அதாவது 'பிரம்ம முகூர்த்த' நேரத்தில் எழுந்து கோலமிடுவது வழக்கம். இதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன:




மார்கழி மாதம் இறைவனுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. ஆண்டாள் நாச்சியார் திருப்பாவை பாடிய மாதம் இது. இறைவனை வரவேற்கவும், மங்கலம் பெருகவும் வாசலில் வண்ணக் கோலங்கள் இடப்படுகின்றன.


அதிகாலை நேரத்தில் ஓசோன் படலம் பூமிக்கு மிக அருகில் இருப்பதால், தூய்மையான ஆக்சிஜன் நமக்குக் கிடைக்கிறது. கோலமிடுவதற்காக அதிகாலையில் குனிந்து நிமிர்ந்து வேலை செய்வது ஒரு சிறந்த உடற்பயிற்சியாகவும் அமைகிறது.


பொதுவாக மார்கழி கோலங்கள் அரிசி மாவு கொண்டு இடப்படுகின்றன. இது எறும்பு, சிட்டுக்குருவி போன்ற சிறு உயிரினங்களுக்கு உணவாக அமைகிறது. இது "பசிப்பிணி போக்கும்" ஒரு அறச்செயலாகக் கருதப்படுகிறது.


இப்படிப் பல காரணங்கள் உள்ளன. மார்கழியில் காலையில் எழுவோம்.. வாசல் நிறைத்துக் கோலமிடுவோம்.. கண்ணனின் புகழ் பாடுவோம்.. ஆண்டாளின் அருளைப் பெறுவோம்.


(பாவை.பு, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)