- அ.கோகிலா தேவி
சென்னை: மார்கழி மாதம் என்றாலே தெய்வ வழிபாட்டிற்குரிய சிறப்பு மிக்க மாதம் ஆகும். மார்கழியில் அதிகாலை நீராடி இறைவனை வழிபடுவது சிறப்பாகும். மார்கழியில் விஷ்ணு வழிபாடு மட்டும் இன்றி சிவன் வழிபாடும் சிறப்புமிக்கது.
இம்மாதத்தில் வைணவ தலங்களில் அதிகாலையில் திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாசுரங்கள் பாடுவது சிறப்பு. அதேபோல் சிவன் கோவிலில் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவையும் பாடப்படுகிறது.
மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் கிருஷ்ணர் கூறியுள்ளது போல் இறை வழிபாட்டிற்கு உகந்த மாதம் மார்கழி. இம்மார்கழி மாதத்தில் உள்ள சிறப்பு வழிபாடுகள்.
அனுமன் அவதரித்த நாளான மார்கழி அமாவாசை இம்மாதம் 4-ம் தேதி (19.12.2025) அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

மார்கழி மாதம் 10ஆம் தேதி (25.12.2025) வியாழக்கிழமை பிள்ளையார் நோன்பு வருகிறது.
மகாவிஷ்ணுவுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி இந்த ஆண்டு மார்கழி மாதம் 15 ஆம் தேதி (30.12.2025) செவ்வாய்க்கிழமை வருகிறது.
சிவாலயங்களில் முக்கிய உற்சவங்களில் ஒன்றான ஆருத்ரா தரிசனம் மார்கழி மாதம் 19ஆம் தேதி (03.01.2025)சனிக்கிழமை வருகிறது.
மார்கழி மாதம் 30 நாட்களும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது பெண்கள் அதிகாலையில் எழுந்து நீராடி வாசலில் வண்ணக்கோலம் இட்டு விளக்கேற்றி மகாலட்சுமியை வீட்டிற்கு அழைப்பார்கள்.
(அ.கோகிலா தேவி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு
Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா தவெக?
ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!
மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு
மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!
தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!
மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!
{{comments.comment}}