அனுபவம்!

Su.tha Arivalagan
Dec 23, 2025,04:42 PM IST

- க.யாஸ்மின் சிராஜூதீன் 


வாழ்க்கை முழுவதும் பயணிப்பாய் 

எங்களுடனே நீ என்ன மாயமோ ...!!!

நாங்கள் பார்க்கவில்லையே உன்னை......


நீ எங்கள்  காவலனா நாங்கள் உணரலையே.....

காலம் கடந்த பின்னே உணர்கிறோம் 

நீ எங்கள் நிழலாய் இருந்ததை....


உன்னை அறிய விலை உண்டு 

மீண்டும் பெற முடியாத வாழ்நாட்களே......

மீதமுள்ள  நாட்கள்  சிறப்பாய் சிந்தித்து வாழவும், இளைய சமூகத்திற்கு கூறவும்....


அனுபவம் உரைத்திடும் உண்மையே 

மூத்தோர்சொல் அமிர்தமாகுமே ...!!!




இளையோர் கேட்டு வாழ்ந்தால் வாழ்கை சிறக்குமே...

பட்டுத்தான் தெளிவேன் என்றால் 

காலம் கடக்குமே.....!!!


அனுபவம் சிறந்த ஆசானே 

கற்றுத்தெளியும் பாடமே 

வழிகாட்டி ஆகுமே...!!!


அனுபவம் நம்மை ஏற்றிடும் ஏணியே

அறிந்து வாழ்ந்திட வேண்டுமே...!!!!


உற்றதுணையாக நம்முடனே பயணம் செய்து காத்திடுமே...

தன்னிகரில்லா நண்பனே எங்கள் அனுபவமே.......!!!


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)