முருக பக்தியின் மகத்துவம் பேசும் ஆடி கிருத்திகை –காவடி, பால்குடம், பக்தி பேரலை

Su.tha Arivalagan
Aug 06, 2026,05:14 PM IST

- அ. சீ. லாவண்யா


சென்னை: ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திர நாள், முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த புனித நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் முருகனை மனமுருகி வழிபட்டால் வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கி, துணிவு, அறிவு, ஆரோக்கியம் மற்றும் வெற்றி கிடைக்கும் என்பது பக்தர்களின் உறுதியான நம்பிக்கையாகும்.


மக்கள் திரளானோர் இந்நாளில் காவடி எடுத்து முருக பெருமனை வழிபாடுவார்கள். காவடியிலே புஷ்ப காவடி, பால் காவடி, பன்னீர் காவடி, வேல் காவடி, சந்தன காவடி போன்ற பல காவடிகளை எடுத்து மக்கள் வழிபாடுகின்றர்கள்.


முருக பெருமானுக்கு எடுக்கப்படும் முக்கிய காவடிகள்




பால் காவடி – பாலால் அபிஷேகம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்படும் காவடி. மிகவும் பொதுவானது.


பன்னீர் காவடி – பன்னீரை (ரோஜா நீர்) கொண்டு அபிஷேகம் செய்வதற்காக எடுக்கப்படும் காவடி.


புஷ்ப காவடி – பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காவடி. பக்தியையும் அழகையும் வெளிப்படுத்தும்.


அலகு காவடி – நேர்த்திக்கடனாக உடலில் வேல் அல்லது அலகு குத்திக்கொண்டு எடுக்கப்படும் காவடி.


மயில் காவடி – முருகனின் வாகனமான மயிலைப் பிரதிபலிக்கும் வகையில் மயிலிறகுகளால் அலங்கரிக்கப்படும் காவடி.


இளநீர் காவடி  – இளநீரை அபிஷேகத்திற்காக எடுத்துச் செல்லப்படும் காவடி.


சந்தன காவடி – சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்டு அல்லது சந்தன அபிஷேகத்திற்காக எடுக்கப்படும் காவடி.


தேன் காவடி – தேன் அபிஷேகத்திற்காக எடுத்துச் செல்லப்படும் காவடி.


சர்க்கரை காவடி – சர்க்கரை அல்லது வெல்லம் சமர்ப்பிக்கும் நேர்த்திக்கடன் காவடி.


வேல் காவடி – வேல் வடிவில் அலங்கரிக்கப்பட்டு முருகனின் சக்தியைப் போற்றும் காவடி.


குறிப்பாக ஆறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழமுதிர்சோலை ஆகிய திருத்தலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், பால் குடம் சுமந்தும், விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தியும் முருகனை தரிசித்தனர்.


ஆடி கிருத்திகை நாளில் சிவப்பு மற்றும் மஞ்சள் மலர்களால் முருகனுக்கு அர்ச்சனை செய்வதும், வேலுக்கு பூஜை செய்வதும், கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் மற்றும் சுப்பிரமணிய புஜங்கம் போன்ற பக்தி பாடல்களைப் பாராயணம் செய்வதும் மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது.


முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகை விழா பக்தி பரவசத்துடன் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விழாவின் சிறப்பு நிகழ்வாக, மாலை நேரத்தில் கோயில் தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவ மூர்த்தி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.


"வேலைக் கையில் ஏந்திய முருகன், பக்தர்களின் வாழ்வில் வெற்றியையும் நம்பிக்கையையும் ஏற்றும் தெய்வம்" 

வாழ்வில் உயர முருக பெருமானின் அருளை பெற்று வாழ்வில் உயர்வோம்.


செய்தி+புகைப்படம்: அ.சீ. லாவண்யா