ஆடிக்கிருத்திகை.. வியாழன் மாலை முதல் வெள்ளி மாலை வரை.. முருகனை வழிபடலாம்

Aug 06, 2026,11:28 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


பராபவ வருடம் 20 26 ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை வரை கிருத்திகை நட்சத்திரம் அமைந்துள்ளது. எனவே இந்த இரண்டு நாட்களும் முருகன் வழிபாடு செய்ய உகந்தது.


ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு  ஏற்ற சக்தி வாய்ந்த மாதம் மட்டுமல்லாமல் அனைத்து தெய்வ வழிபாட்டிற்கும் உகந்த மாதமாகும். ஆடி 1, ஆடிப்பெருக்கு,ஆடி பௌர்ணமி, ஆடி அமாவாசை, ஆடிக்கிருத்திகை என தெய்வ வழிபாட்டிற்கு உரிய விசேஷ நாட்கள் நிறைந்த மாதம் ஆகும். முருகன் வழிபாட்டில் முக்கியமான விரதங்களில் ஒன்று ஆடி கிருத்திகை விரதம் ஆகும்.


நேரம்:


ஆடி கிருத்திகை :




கிருத்திகை நட்சத்திரம்   -  06.08.2026 வியாழன் மாலை 06.18 மணி தொடங்கி கிருத்திகை நட்சத்திரம் நிறைவு 07.08.2026 வெள்ளி மாலை 04.51 மணி வரை.


வழிபாடுகள்:


திருத்தணி உள்ளிட்ட பெரும்பாலான முருகன் கோவில்களில் ஆகஸ்ட் 6ஆம் தேதி வியாழக்கிழமை ஆடிப்பெருக்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. சில முருகன் கோவில்களில் ஆகஸ்ட் 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆடி கிருத்திகை  திருவிழா கொண்டாடப்படுகிறது. எனவே பக்தர்கள் தங்கள் வசிக்கும் இடங்களில் உள்ள முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை விழா எந்த நாள் என்பதை அறிந்து விசாரித்து அந்த நாள் விரதம் இருந்து முருகன் வழிபாடு செய்வது சிறந்தது.


எளிய பூஜை முறை:


வீடுகளில் பூஜை அறையில் ஷட் கோண கோலமிட்டு அதில் ஆறு அகல் விளக்குகள் நெய் தீபம் ஏற்றி காலை மாலை இருவேளையும் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. முருகனுக்கு உரிய நைவேத்தியம் தங்களால் இயன்ற பால், பழம்,பஞ்சாமிர்தம், பொங்கல், திணை மாவு தேன், வெற்றிலை பாக்கு வைத்து வழிபடுவது சிறப்பு.


வீட்டில் வேல் வைத்திருப்பவர்கள் அபிஷேகம் செய்து வழிபடலாம். முருகன் படத்திற்கு அல்லது முருகன் சிலை முன்பு தீபம் ஏற்றி முருகனுக்கு உரிய திருப்புகழ், கந்த குரு கவசம்,கந்த சஷ்டி கவசம்,கந்தர் அலங்காரம்,கந்தர் அனுபூதி, வேல்மாறல், குமாரஸ்தவம் என முருகனுக்கு உரிய பாடல்களை படிப்பதும் கேட்பதும் மன நிம்மதியை கொடுக்கும். திருமண பாக்கியம் கிடைக்க,குழந்தை வரம் வேண்டி,வேலை கிடைப்பவர்கள், படிப்பில் சிறந்து விளங்க, வேலையில் உயர் பதவி கிடைக்க,தொழில் முன்னேற்றம்,நோய் நொடிகளில் இருந்து விடுபட என அவரவர் வேண்டுதல்களை நினைத்து மனதார முருக வழிபாடு செய்ய கட்டாயம் முருகன் அருள் கிடைக்கும்.


ஆடிக்கிருத்திகை தினத்தில் அனைவரும் முருகன் அருள் பெற்று நல்வாழ்வு வாழ்வோமாக. மேலும் இதுபோன்ற  சுவாரஸ்யமான  ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Sasikala Viswanathan Short story: விந்தை

news

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026 : அறிவிக்கப்பட்ட திட்டங்களும், ஒதுக்கப்பட்ட நிதியும்

news

ஆடிக்கிருத்திகை.. வியாழன் மாலை முதல் வெள்ளி மாலை வரை.. முருகனை வழிபடலாம்

news

கிருத்திகை நாயகனே கீர்த்திகளை தருபவனே..!

news

விண் மகளே... பூமித்தாய் நனைந்திடவே பூலோகம் வந்தாயோ...!

news

Double Meaning talks: மனிதர்கள் எப்போது டபுள் மீனிங் + கெட்ட வார்த்தையில் பேச ஆரம்பிக்கிறார்கள்?

news

Fist TVK Govt Budget: தமிழக பட்ஜெட் 2026 : தவெக அரசால் பெயர் மாற்றப்பட்ட 2 திட்டங்கள்

news

பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை...ஸ்டிக்கர் ஒட்டும் அரசு : எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்

news

பட்ஜெட் பூஜ்ஜியம்...மக்களுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட் : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்