கண் பார்வை அற்றோரின் நேசம் நிஜம்

Su.tha Arivalagan
Nov 26, 2025,04:27 PM IST

- கவிதா உடையப்பன், சேலம்


கண்ணை மூடி நான் பார்த்தேன் 

கண் இல்லாதவர் எவ்வாறு உணர்வார் என்று:

என் மாமனின் கடுகடுப்பான முகம் எனக்குப் புலப்படவில்லை 

என் தாயின் தயவான முகம் எனக்குத் தெரியவில்லை

என் தந்தையின் துடுக்கான முகம் எனக்குத் தோன்றவில்லை 

என் அண்ணன் காட்டும் அன்யோன்யம் எனக்குத் தென்படவில்லை 

முக பாவங்கள் தெரியாததினால், அவ்வடிவங்களில் நான் வேற்றுமை காணவில்லை. 




தரையில் உள்ள மேடு பள்ளங்களை கைத்தடி இல்லாது நான் அறியேன்

வாழ்வில் உள்ள மேடு பள்ளங்களை  கோல் இன்றி யார் அறிவார்  ?


நீ மழையை, மேக மூட்டத்தில் காண்பாய் 

நானோ மண் வாசனையில் காண்பேன். 


பூக்களை, அதன் மனம் கொண்டு உணர்வேன் 

மனிதர்களை, அவர்கள் குணம் கொண்டு உணர்வேன்.  


எப்பொருளும் என்னை வசியப்படுத்தியதும் இல்லை 

திசை திருப்பியதும் இல்லை. 


எனக்கு நிலைக் கண்ணாடியும் வேண்டாம் 

மூக்குக் கண்ணாடியும் வேண்டாம். 

 

“இரவையும் பகலையும் காணாததினால், இருட்டைக் கண்டு நான் அஞ்சியதில்லை ; 

எனினும் காலைப் பனியையும், மாலை மதியையும் காணமுடைவில்லையே!“  

என்று வருந்துவதுண்டு 


பார்த்தால் தான் காதலா ?  

பார்க்காமலே நிஜத்தை நேசிபவர்கள் நாங்கள்!


(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் கவிதா உடையப்பன் ரத்தினா செல்வகுமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)