The world of AI.. மனித சிந்தனையின் நவீன வடிவம்.. செயற்கை நுண்ணறிவு
- தா.சிலம்பரசி
செயற்கை நுண்ணறிவு (AI) என்பது மனித சிந்தனையின் நவீன வடிவம்
மனிதன் கண்டுபிடித்த அதிசயங்களுள் அவனது சிந்தனையையே இயந்திரமாக மாற்ற முயலும் முயற்சிதான் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI). மனிதன் யோசிக்கும் கற்றுக்கொள்ளும் முடிவெடுக்கும் திறனை இயந்திரங்களுக்குள் ஊட்டி, அவற்றை மனிதனின் உதவியாளனாக மாற்றும் அறிவியலே AI. இன்றைய உலகில் “AI இல்லாத வாழ்க்கை” என்றே சொல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.
AI தோற்றமும் வளர்ச்சியும்
“Artificial Intelligence” என்ற சொல்லை முதன்முதலில் 1956 ஆம் ஆண்டு ஜான் மெக்கார்த்தி (John McCarthy) என்பவர் பயன்படுத்தினார்.
அமெரிக்காவில் நடைபெற்ற Dartmouth Conference எனும் கருத்தரங்கில், “இயந்திரங்களும் மனிதனைப் போல சிந்திக்க முடியும்” என்ற எண்ணம் விதைக்கப்பட்டது.
ஆரம்ப காலங்களில் AI என்பது ஆய்வகங்களுக்குள் மட்டுமே இருந்தது. கணித கணக்குகள், சதுரங்க விளையாட்டு, எளிய முடிவுகள் போன்றவற்றிற்கே அது பயன்பட்டது. ஆனால், 1990–2000 : கணினி வளர்ச்சி 2010க்கு பின் : Internet, Big Data, Machine Learning
இன்றைய காலம் : ChatGPT, Google AI, Alexa, Siri போன்ற கருவிகள் AI மனித வாழ்வின் அங்கமாக மாறியுள்ளது.
ஆசிரியராக AI
கல்வியின் புதிய தோழன் ஒரு ஆசிரியருக்கு AI என்பது போட்டியாளன் அல்ல; துணை ஆசிரியன்.
ஆசிரியர்களுக்கான பயன்பாடுகள்
பாடத்திட்ட விளக்கம் எளிதாக்குதல் கற்பித்தல் உபகரணங்கள் (Worksheets, PPT, Question papers) தயாரித்தல், மாணவர்களின் திறன் அடிப்படையில் தனிப்பட்ட பயிற்சி, மொழிபெயர்ப்பு உள்ளடக்க உருவாக்கம், ஆராய்ச்சி, புதிய கற்பித்தல் முறைகள்
AI ஆசிரியரை மாற்றாது; ஆசிரியரின் சுமையை குறைத்து, மனிதநேயத்தை அதிகரிக்கும். மாணவர்களுக்கு AI கற்றலின் புதிய உலகம். மாணவர்களுக்கு AI ஒரு அறிவு வழிகாட்டி.
மாணவர் பயன்பாடுகள்:
சந்தேகங்களுக்கு உடனடி விளக்கம், சுயகற்றல் (Self-learning), தேர்வு தயாரிப்பு,மொழி கற்றல்,படைப்பாற்றல் வளர்ச்சி (கவிதை, கட்டுரை, கதை), ஆனால், AI மாணவனின் மூளைக்கு மாற்றாக அல்ல; உதவிக்கரமாக மட்டுமே இருக்க வேண்டும்.
பொதுமக்கள் வாழ்க்கையில் AI மிக முக்கியப் பங்காற்றி வருகிறது. இன்று நாம் தினமும் பயன்படுத்தும் பல விஷயங்களில் AI மறைந்துள்ளது:
Google Search
Google Maps
Online Banking
Face Recognition
மருத்துவ பரிசோதனை
விவசாய ஆலோசனைகள்
அரசு சேவைகள்
AI பொதுமக்களின் நேரம், உழைப்பு, செலவு ஆகியவற்றை மிச்சப்படுத்துகிறது.
சில முக்கிய AI கருவிகள் குறித்துப் பார்த்தோம் என்றால்,
ChatGPT – உரையாடல், எழுத்து, கற்றல்
Google Gemini / Bard – தகவல் தேடல்
Copilot – Programming உதவி
Grammarly – மொழித் திருத்தம்
Canva AI – வடிவமைப்பு
Voice Assistants – Alexa, Siri
என ஏகப்பட்டவை உள்ளன. இன்னும் வந்து கொண்டேதான் இருக்கின்றன. இந்த கருவிகள் மனிதனின் திறனை விரிவுபடுத்துகின்றன. அந்த நோக்கத்தில்தான் இதை நாம் கையாள வேண்டும். அப்போதுதான் சிறந்த முறையில் இவற்றின் நோக்கமும் நிறைவேறும்.
AI – நன்மைகள்
ஏஐ நல்லதா கெட்டதா என்பதை விட அதை நல்ல பயன்பாட்டுக்கு எடுத்துப் பயன்படுத்துவது நமது கையில்தான் உள்ளது.
நேரச் சேமிப்பு, துல்லியமான தகவல், கற்றல் எளிமை, ஆராய்ச்சி வளர்ச்சி, மருத்துவ, கல்வி, தொழில் முன்னேற்றம் ஆகிய நல்ல விஷயங்கள் இதில் உள்ளன. இதை நாம் சரியாக பயன்படுத்தும்போது அது நல்லதாகவே இருக்கும். நமக்கு, நமக்கான வேலையையும் அது சுலபமாக்கும்.
AI – தீமைகள் / சவால்கள்
மனித சிந்தனை மந்தமாவதற்கான அபாயம், வேலை வாய்ப்புகளில் மாற்றம், தவறான தகவல் பயன்பாடு, நெறிமுறை (Ethics) சிக்கல்கள், தனியுரிமை (Privacy) ஆபத்து என்று எதிர்மறைகளும் ஏராளமாகவே உள்ளன. AIயை பயன்படுத்த வேண்டும், ஆனால் அதற்கு அடிமையாகி விடக் கூடாது. இதற்கு என்று இல்லை. எதற்குமே அடிமையாகி விடக் கூடாது. எல்லாவற்றையும் அளவாக பயன்படுத்த வேண்டும். அதன் பலன், நோக்கத்தை உணர்ந்து பயன்படுத்தும்போது எல்லாமே சரியாகவே இருக்கும்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் கூட நஞ்சுதானே!
ஆரம்பத்தில் கனவாக இருந்த AI இன்று மனித வாழ்க்கையின் நிஜமாக மாறியுள்ளது. மனிதன் AIயை உருவாக்கினான்; AI மனிதனை உயர்த்த வேண்டுமே தவிர, மனிதத்தன்மையை குறைக்கக் கூடாது. AI என்பது ஒரு ஆயுதம். அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம்.
ஒரு ஆசிரியராக, AIயை கல்விக்கான ஒளியாக மாற்ற வேண்டும். மாணவர்களுக்கு நெறிமுறையுடன் பயன்படுத்தும் விழிப்புணர்வு வழங்க வேண்டும். “AI மனிதனை மிஞ்ச அல்ல; மனிதனை உயர்த்த” என்ற எண்ணமே நம் வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
(தா. சிலம்பரசி வேலூர் மாவட்டம் மேல்மணவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 13 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஆன்லைன் வகுப்புகள், செயல் ஆராய்ச்சி, 3D மற்றும் AI தொழில்நுட்பம், விளையாட்டு வழிக் கற்றல், மின்னணு மதிப்பீடு போன்ற நவீன முயற்சிகளின் மூலம் தொடக்க நிலை மாணவர்களை ஆர்வமுடன் கற்றலில் ஈடுபடுத்தி, தமிழ்நாடு அரசின் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் தொழில்நுட்பக் கல்வி முன்னேற்றத்தில் சிறப்பான பங்களிப்பு செய்துள்ளார். தமிழின் மீது கொண்ட ஆர்வத்தால் தமிழ்நாடு அரசின் ஊஞ்சல், தேன் சிட்டு, கனவு ஆசிரியர் இதழ்களில் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு, மாணவர்களின் கதை, கவிதை, ஓவியம், கட்டுரை போன்ற படைப்பாற்றல் திறன்களை வளர்த்துள்ளார். இவரின் சிறந்த கல்விச் சேவையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசு 2025 ஆம் ஆண்டு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கி கௌரவித்துள்ளது)