பேச்சின் வலிமை!
Jan 21, 2026,10:23 AM IST
- கவிஞர் க. முருகேஸ்வரி
தெளிவாகப் பேசு....
தேவையான இடங்களில் பேசு....
தேவையற்ற இடங்களில்
வாயை மூடிப் பேசு....
அமைதியை விட
ஆழமான பேச்சு
வேறு ஏதும் இல்லை.!!....
பேசத் தெரியும் என்றாலும்
பேசிக் கொண்டே இருக்காதே.....
கேட்பவர்க்கு எரிச்சலூட்டும்......
பிறரைப் பேச அனுமதி .....
அளந்து பேசு......
புத்திசாலி என்று நினைத்து பிதற்றாதே
வார்த்தைகள் வலிக்கும்
நக்கலாய் பேசாதே
நாவடக்கி பேசு
நாவில் சுட்டால் ஆறாது
சுருங்கச் சொல்....
நறுக்கென்று பேசு....!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).