குடைக்குள் மழை

Su.tha Arivalagan
Apr 20, 2026,11:44 AM IST

முத்தமிழரசி சிவரூபன் சர்வேஸ்வரி


அன்பெனும் குடைக்குள் 

அகப்பட்ட உறவுகள் பாராய்


பண்பெனும் பாசத்துள் 

பகிரும் காதலின்பம் கோடி


வண்ணமலர் தோட்டத்தில் 

வகையான பூக்களின் நறுமணம்போல்


எண்ணங்கள் விரிந்தாட 

ஏற்றங்கள் இசைந்தது கூடியே


காலமே தாலாட்ட 

குடும்பமெனும் கூட்டுக்குள் விளையாட


சீலமே தான்மிளிர 

சிந்தையே வசமாகி நின்றதுவே




வேடமே இல்லாத 

விழுமியம் தளைத்து ஓங்கிடவே


தர்மத்தின் வாசலிலே திகழும் 

சித்திரங்களை என்சொல்வேன்


(முத்தமிழரசி சிவரூபன் சர்வேஸ்வரி இலங்கையைச் சேர்ந்தவர். தமிழ் இசை இலக்கிய ஆர்வலர்,  சமூக சேவகர், மக்கள் நலம் விரும்பி, சமூக சிந்தனையாளர்)