நம்பிக்கை.. ஆன்மாவின் மெளன வெளிச்சம்!
Jan 13, 2026,03:32 PM IST
- கவிதா அறிவழகன்
இறைவனின் அழகிய படைப்புகளில் ஒன்று
ஆன்மா!
அழகிய இதயத்தினுள்
சப்தமில்லாமல் ஒளிந்து
கொண்டிருக்கிறது!
அது நமது பயணங்களின்
வழிகாட்டியாகவும்,
நாம் செய்யும் செயல்களிலும்,
நாம் பேசும் சொற்களிலும்,
துணை நிற்கின்றது!
நம்மில் சில ஆன்மாக்கள்
மரணத்தின் விளிம்பில் இருக்கையில்,
ஆன்மாவின் வலிகளும்,
வேதனைகளும்,
வார்த்தைகளால் மதிப்பிடமுடியவில்லை!
ஆண்டவனின் படைப்புகளில்
இந்த வேதனைக்கு ஏன்
பதில் இல்லை?
பதில் இல்லையெனினும்,
நம்பிக்கை மட்டும்
ஆன்மாவின் மௌன வெளிச்சமாக
எஞ்சுகிறது!
நான் இறைவனின்
பாதங்களில்
என் கோரிக்கையை
வைக்கின்றேன்!
எல்லா ஆன்மாக்களின்
புண்ணியங்களை
கணக்கிட்டு,
அவற்றை
இறைவனின் திருப்பாதங்கள்
சேரட்டும்!