சுவாசத்தின் வாசமே!
Apr 30, 2026,10:40 AM IST
- பாவலர் மாயோன்மங்கை
என் இரவின் வெளிச்சமே
இதயத்தின் அனிச்சமே
மருதத்தின் விளைச்சலே
மனமோ எனக்கு உளைச்சலே
குறிஞ்சி மலைத்தேனே
உறிஞ்சிக் குடிக்கத் தானே
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டாய் நானே
முந்தானை தரும் வாசமே
மூழ்கத் துடிக்குதே பாசமே
சாமத்தில் தேடுது நேசமே
சங்கீதம் பாடும் ஆகாசமே
நெஞ்சத்திலே தீ பத்திடும்
கொஞ்சாது கிறுக்கு முத்திடும்