தேய்பிறை சஷ்டி விரதம்.. ஆறுமுகப் பெருமானுக்கு உரிய திதி!
- ஸ்வர்ணலட்சுமி
பராபவ வருடம் 2026 மே மாதம் ஏழாம் தேதி வியாழக்கிழமை சித்திரை 24-ஆம் நாள் தேய்பிறை சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஆறாவது திதியாக வரும் சஷ்டி ஆறுமுக பெருமான் முருகனுக்கு உரிய திதி ஆகும்.
முருக பக்தர்கள் பல காலமாக கடைபிடிக்கும் முருகப்பெருமானுக்குரிய மிக முக்கியமான விரதங்களில் சஷ்டி விரதம் சிறப்பானது. இந்த திதி மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை சஷ்டிகளில் வரும் நாட்களை 'மாத சஷ்டி விரதம்' என்று அழைப்பார்கள்.
சஷ்டி விரத சிறப்புகள் மற்றும் மே மாதம் முதல் இந்த ஆண்டு (2026) அமைந்திருக்கும் சஷ்டி விரத நாட்களை பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
சிறப்புகள்:
திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை வரம் தள்ளிப் போகின்றவர்கள் சஷ்டி விரதம் மேற்கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்ய கட்டாயம் முருகப்பெருமான் அருள் கிடைக்கப் பெறுவர். முருகப்பெருமானின் அருளால் அவர்கள் வேண்டிய அனைத்தும் நிறைவேறும்.தீராத துன்பங்கள் அனைத்தும் தீரும்.
வழிபாடு :
சஷ்டி விரதம் மேற்கொள்பவர்கள் பூஜை அறையில் முருகப்பெருமானுக்குரிய சடாக்ஷர கோலமிட்டு, ஆறு நெய் தீபங்கள் ஏற்றி, நைவேத்தியமாக அவரவர்களுக்கு இயன்றவற்றை படைத்து, (குறிப்பாக முருகனுக்கு பஞ்சாமிர்தம் படைப்பது சிறப்பு ) கந்த சஷ்டி கவசம், கந்தர் அனுபூதி,கந்தர் அலங்காரம்,கந்த குரு கவசம்,குமாரஸ்தவம் என கந்தனுக்கு உரிய மந்திரங்கள் படிப்பது, தீபாராதனை செய்து பூஜை முடிந்த பிறகு முருகனுக்கு படைத்தவற்றை உண்டு விரதத்தை முடிப்பது சிறப்பு.
20 26 ஆம் ஆண்டில் மே மாதம் முதல் முருகப்பெருமானுக்கு வரும் சஷ்டி விரத தேதிகள் குறித்த விபரங்கள் இதோ..
மே 07 -வியாழக்கிழமை. சித்திரை 24.
மே 22 - வெள்ளிக்கிழமை வைகாசி 08.
ஜூன் 06 - சனிக்கிழமை வைகாசி 23.
ஜூன் 20- சனிக்கிழமை ஆனி 06.
ஜூலை 06 - திங்கட்கிழமை ஆனி 22.
ஜூலை 19- ஞாயிற்றுக்கிழமை ஆடி03.
ஆகஸ்ட் 04 - செவ்வாய்க்கிழமை ஆடி 19.
ஆகஸ்ட் 18 செவ்வாய்க்கிழமை ஆவணி 01.
செப்டம்பர் 02 -புதன்கிழமை ஆவணி 16.
செப்டம்பர் 17- வியாழக்கிழமை ஆவணி 31.
அக்டோபர் 02 வெள்ளிக்கிழமை புரட்டாசி 15.
அக்டோபர் 16 வெள்ளிக்கிழமை புரட்டாசி 29.
அக்டோபர் 31 சனிக்கிழமை ஐப்பசி 14.
நவம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை ஐப்பசி 29.
நவம்பர் 29 ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை 13.
டிசம்பர் 15 செவ்வாய்க்கிழமை கார்த்திகை 29.
டிசம்பர் 29 செவ்வாய்க்கிழமை மார்கழி 14.
முருக பக்தர்கள் அனைவருக்கும் முருக பெருமான் அருள் கிடைக்க பெறுவோமாக. மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.