சங்கடஹர சதுர்த்தி தெரியும்.. அது என்ன அங்காரக சங்கடஹர சதுர்த்தி?

May 05, 2026,01:29 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


பராபவ  வருடம் 2026 மே மாதம் ஐந்தாம் தேதி செவ்வாய்க்கிழமை, சித்திரை மாதம் 22ஆம் நாள்  சங்கடஹர சதுர்த்தி நாளாகும். செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தியை "அங்காரக சங்கடஹர சதுர்த்தி" என்றும் "அங்காரகி சதுர்த்தி "என்றும்  அழைக்கப்படுகிறது.


சங்கடஹர என்பதன் பொருள்  சங்கடம் - துன்பம். ஹர -விலகும். இந்த நன்னாளில் விநாயகர் வழிபாடு செய்வதனால் நம் துன்பங்கள் அனைத்திலிருந்தும் விடுபடுவது உறுதி.


தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் அங்காரக சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


சங்கடஹர சதுர்த்தி வழிபாடு, இந்த வருடம் உள்ள சங்கடஹர சதுர்த்தி தேதிகள், மற்றும் கூற வேண்டிய கணபதி ஸ்லோகம் பற்றி விபரம் இதோ..


வழிபாடு:




சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி நம் வீட்டில் உள்ள பிள்ளையார் படம் அல்லது உருவச்சிலைக்கு விபூதி குங்குமம் வைத்து,சிவப்பு மலர்களான செம்பருத்தி மலர்கள் சாற்றி, (குறிப்பு: விநாயகருக்கு பிடித்த மலர் செம்பருத்தி)


அவருக்கு பிடித்தமான மோதகம் (கொழுக்கட்டை) படைத்து பூஜை செய்த பிறகு இந்த பிரசாதத்தை உண்டு விரதத்தை முடிப்பது சிறப்பு.


சந்திரோதய நேரம் (மாலை நேரம்) அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று அபிஷேகப் பொருட்கள் மற்றும் அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது நன்மை பயக்கும். விரதம் மேற்கொள்பவர்களின் சகல சங்கடங்களையும் விநாயகர் நீக்குவார் என்பது ஐதீகம்.


மே மாதம் முதல் 20 26 ஆம் ஆண்டு  சங்கடஹர  சதுர்த்தி தேதிகள் :


மே 5- சித்திரை 22 செவ்வாய்க்கிழமை. அங்காரக சங்கடஹர சதுர்த்தி.


ஜூன் 4 -  வைகாசி 21 வியாழக்கிழமை.


ஜூலை 3  - ஆனி  19 வெள்ளிக்கிழமை.


ஆகஸ்ட்0 2 -  ஆடி 17 ஞாயிற்றுக்கிழமை.


மகா சங்கடஹர சதுர்த்தி


ஆகஸ்ட் 31  -ஆவணி 14 திங்கட்கிழமை.


செப்டம்பர் 29 -  புரட்டாசி 12  செவ்வாய்க்கிழமை.


அக்டோபர் 29 -  ஐப்பசி 12 வியாழக்கிழமை.


நவம்பர் 27  - கார்த்திகை 11  ,வெள்ளிக்கிழமை.


டிசம்பர் 27  - மார்கழி 12 ஞாயிற்றுக்கிழமை.


சிவப்பு மலர்கள் அர்ச்சனை:


முழுமுதற் கடவுளான விநாயகருக்கு பிடித்தமான சிவப்பு நிற மலர்களில் செம்பருத்தி மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்வது அதீத நன்மை பயக்கும். ஏனெனில்,சிவப்பு மலர்கள் ஆற்றலின் அடையாளமாகும். தொழில் அல்லது வியாபாரங்களில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று வேண்டுதல் வைத்திருப்பவர் அங்காரகி சதுர்த்தி மற்றும் புதன்கிழமைகளில் விநாயகருக்கு சிவப்பு மலர்களை சாற்றி வழிபட தடைகள் அனைத்தும் தவிடு பொடியாகும் என்பது ஐதீகம்.


வறுமை நீங்கி நிதிநிலை உயர  21 அருகம்புல் முடிச்சுகள் சாற்றி வழிபடுவது விசேஷம்.


அறிவுத்திறன் மேம்பட வன்னி இலைகளை, விநாயகருக்கு சமர்ப்பித்து வழிபட,சிவபெருமான் ஆசியும் சேர்த்து கிட்டும்.


சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டு ஸ்லோகம்:


 கணபதி மூலமந்திரம் :

 

"ஓம் ஸ்ரீ ம்  கணாதி பதயே  ஏக தந்தாய  

லம்போதராயl

ஹேரம் பாய நாலு கேர  பிரியாய   

மோதபக்ஷ ணாயll

மமா பீஷ்ட பலம் தேஹி 

பிரதிக் கூலம் மே நஸ்யதுl

அனுகூலம்  மே 

ஆச கல் பய ll "


கணபதி காயத்ரி மந்திரம் :


"ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி பிரசோதயாத் ll "


அனைவரும் விநாயகப் பெருமான் ஆசிகள்  கிடைக்கப் பெற்று நல்வாழ்வு வாழ்வோமாக. மேலும் இது போன்ற சுவாரஸ்யமான ஆன்மீக  தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்