யோசனை, சிந்தனை, ஒருமுகப்படுத்துதல் (செறிவு) & தியானம்

Maitreyi Niranjana
Mar 12, 2026,10:19 AM IST

- மைத்ரேயி நிரஞ்சனா


யோசனை, சிந்தனை,  ஒருமுகப்படுத்துதல் (செறிவு) & தியானம் 


மேலே சொல்லப்பட்டிருக்கும் அனைத்து வார்த்தைகளும் ஒன்றே போல் தோன்றும்.. ஆனால் இந்த வார்த்தைகள் நம்முடைய வெவ்வேறு செயல்களை மற்றும் ஆற்றல் பயன்படுத்துதலை விளக்குகிறது..


யோசனை 


யோசனை (Thinking) இதை சொல்லும் பொழுது ஒரு நிமிடத்திற்குள் என்ன எண்ணங்கள் வந்து செல்கின்றன என்று கவனித்தோமானால் ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாத பல எண்ணங்கள் வந்து செல்கின்றன.. என்னன்ன எண்ணங்கள் வருகின்றன என்பதை ஒரு பேப்பரில் எழுதினால் ஆச்சரியப்பட்டு போவோம்.. தொடர்பு இல்லை என்று சொல்வது எதனால் என்றால் நாம் தான் அதை தொடர்புபடுத்தும் விஷயமாக இருக்கிறோம்.. 


சிந்தனை (Contemplation)




யோசனை என்பது திக்கில்லாமல் எல்லா திசைகளிலும் பயணிப்பது போல என்றால் சிந்தனை என்பது ஒரு திசையில் பயணிப்பது.. அதற்கென்று ஒரு சப்ஜெக்ட் இருக்கும் வேறு சிந்தனைகள் வந்தாலும் அதை ஒதுக்கி வைத்து விட்டு ஒரே திசையில் பயணிப்பது.. கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், சயின்டிஸ்ட் இவர்கள் எல்லோரும் சிந்திப்பது என்பது இந்த வகை..


இப்படி சிந்திக்கும்போது நமது கவனம் அதைப் பற்றிய மட்டுமே இருக்கும்.. பீத்தோவன் இசைமேதை என்று நமக்கு எல்லாம் தெரியும் இவர் மேடை ஏறியவுடன் கான்சர்ட் நடத்தும்போது இவரை பார்த்தால் சூப்பர் ஹுமன் போல தோன்றும்.. அந்த கான்செர்ட் நடத்தும் விதமும் அவருடைய முகபாவங்களும் அவர் ஏதோ வேற லோகத்தில் இருப்பதைப் போல தோன்றும்.. அந்த சமயத்தில் அவரை வேறு யாரோ ( எதுவோ ) ஆட்கொண்டதை போல அவருக்கே தோன்றுமாம்.. ஆனால் அந்த கான்செர்ட் முடிந்தவுடன் அவர் தன்னுடைய இயல்பு நிலைக்கு வந்து விடுவார்.. இந்த வகையான மனிதர்கள் தன் உள்நிலையில் ஒரு பிரிவை உணர்கிறார்கள்.. அவர்கள் இசையமைக்கும் போதோ.. கவி எழுதும் போதோ ஓவியம் வரைவதில் மூழ்கி இருக்கும்போதோ.. புத்தா நிலையை அடைகிறார்கள்.. பிறகு இயல்பு நிலைக்கு வந்து விடுகிறார்கள்..All creative people know this ..


ஒருமுனைப்படுத்தல் (Concentration) 


சிந்தனை என்பது ஒரு திசையில் பயணிப்பது என்று பார்த்தோம்…ஒருமுனைப் படுத்தல் என்பது கவனம் சிதறாமல் ஒரு புள்ளியில் கவனத்தை செலுத்துதல் வேறு எந்த சிந்தனை வந்தாலும் ஒதுக்கி தள்ள விட்டு ஒரே புள்ளியில் கவனம் வைத்தல்.. யோக முறைகள் இதற்கு நம்மை தயார் படுத்துகிறது.. நம்முடைய ஆற்றல் பல திசைகளிலும் சென்று வீணாகி கொண்டிருக்கிறது.. ஒருமுனைப் படுத்தல் மூலம் நம்முடைய ஆற்றல் வீணாவதை தடுக்க முடியும்.. நாம் ஒரு எனர்ஜி குவியலாக இருக்கும் நிலையில் அந்த ஆற்றல் நமக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நல்ல மனநிலையையும் அளிக்கிறது.. இந்த ஆற்றலை.. நல்ல முறையில்.. உலகத்துக்கு பயன்படும் வகையில் உபயோகிக்க தெரிந்த மனிதனுக்கு மட்டுமே குருமார்கள் யோக முறைகளை சொல்லிக் கொடுக்கிறார்கள்.. 


ஒரு சிறிய கதையை பார்ப்போமா 


காஷ்முஷ் ஒரு குருவைப் பற்றி கேள்விப்பட்டார்.. அவர் பலருக்கு யோக முறைகளை கற்றுத் தருவதாகவும் அதனால் பல மந்திர சக்திகள் ஒருவர் பெற முடியும் என்று அறிகிறார்.. அவரிடம் சென்று தானும் யோக முறையில் கற்று பல மந்திர சக்திகள் பெற வேண்டும் என்று ஆவலாய் இருந்தார்..


ஒரு நாள் இந்த குருவை சந்தித்து எனக்கும் சக்தி வாய்ந்த யோக முறைகளை கற்றுக்கொடுங்கள் என்று கேட்டார்.. அந்த குருவும் இவருடைய நோக்கம் என்ன என்பதை பார்த்தவுடன் உணர்ந்து கொண்டார் .. 


நான் சொல்லித் தருகிறேன்.. ஆனால் எனக்காக ஒரு விஷயம் செய்ய வேண்டும் அடுத்த மூன்று நாள் நீ எந்த செயல் செய்தாலும் குரங்கை பற்றி மட்டும் நினைக்கக் கூடாது.. மூன்று நாள் கழித்து என்னிடம் வந்து எத்தனை முறை குரங்கை பற்றி நினைத்தாய் என்று சொல்.. பிறகு பார்க்கலாம் என்று கூறி அனுப்பினார்..


இவர் குரங்கை பற்றி நினைக்கக் கூடாது என்று சொல்லிக் கொண்டே வீடு சென்றார்.. இப்போது என்ன ஆனது என்றால் அவர் எந்த செயல் செய்தாலும் குரங்கு ஞாபகமாகவே இருக்கிறது. குரங்கு குதிப்பதை போல..  மரம் ஏறுவதை போல… இப்படி, நடக்கும்போதும் குரங்கு… உறங்கும்போதும் குரங்கு… சாப்பிடும் போதும் குரங்கு என்று இவர் வாழ்க்கையை குரங்கு ஆக்கிரமித்தது.. 


இவருக்கு குரங்கு பைத்தியம் பிடித்து விட்டது.. மூன்று நாள் கழித்து குருவிடம் சென்று எனக்கு வேற எதுவும் வேண்டாம் இந்த குரங்கிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.. 


இந்த கதை சொல்ல வருவது என்னவென்றால் நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்..


தியானம் (Meditation)


மேலே சொன்ன அனைத்துமே மனம் சம்பந்தப்பட்டது.. மனம் என்னும் பொழுது சிந்தனைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பற்றியது.. ஆனால் தியானம் என்பது எண்ணங்களை பற்றியது அல்ல.. எண்ணங்களே இல்லாமல் இருத்தல்.. (No Mind State).. 


மனம் என்பது ஒரு அறையை போன்றது.. அதில் பல பல பொருட்களை வைத்திருக்கிறோம்.. அந்த பொருட்களில் நமது விருப்பத்தினால் ஆற்றல் செலுத்திக் கொண்டிருக்கிறோம்.. தியானம் என்பது அந்த பொருட்களை நாமே வீசி எறிவது போன்றது.. சில பொருட்களை வெளியேற்றினால் ஒரு காலியிடம் (Space) உருவாகிறது.. 


இதைத் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் அறை காலியாகி நாம் அந்த பொருட்கள் அல்ல… ஒரேடியாக அனைத்தையும் வீசி எறிய முடியும்… ஆனால் திடீரென்று இவ்வளவு பெரிய மாற்றத்தை நம்மில் பலரால் தாங்க முடியாது..


அதனால் கொஞ்சம் கொஞ்சமாக இந்த பொருட்களின் மீது உள்ள பற்றை விட்டுக் கொண்டே வந்தால்… உண்மையில் நாம் யார் என்பதை உணரும் சாத்தியத்தை அறிவோம்.. (Nothing is NOT Nothing but Everything) 


நாம் தொடர்வோம்…