காதல் ஏன் மகத்தானது? (What's so special about Love)

Feb 27, 2026,09:57 AM IST

- மைத்ரேயி நிரஞ்சனா


காதல் என்பது என்ன என்று  கேட்டால் எப்படி வரையறுத்தாலும்.. அதனால் நமக்குள் என்ன நடக்கிறது என்று சொல்லலாமே ஒழிய அது ஒரு தனிப்பட்ட அனுபவம் என்றே சொல்லலாம்.. விவரிப்பது கடினம்..


மனிதன் காதல் வயப்படும் போது அதை Falling in Love என்று சொல்வார்கள்.. தான் என்ற பிம்பத்தை அவன் இழப்பதினால் அவ்வாறு சொல்லப்படுகிறது.. அது ஒரு மகிழ்ச்சியான நிலை.. Blissful நிலை..


ஒரு சிறிய கதை..




காஷ்முஷ் காதல் வயப்பட்டார்.. அந்தப் பெண்ணை அவர் பல தருணங்களில் பார்த்திருந்தாலும் தனிமையில் பார்த்து பேசும் வாய்ப்பு அதுவரை அவருக்கு கிடைக்கவில்லை.. அந்தப் பெண்ணை பார்த்தாலும் அவளுக்கும் இவர் மீது காதல் உண்டு என்றே தோன்றியது. ஒருவர் காதல் வயப்பட்டு இருக்கும்போது அவருடைய நடை, பேச்சு, பார்வை எல்லாமே மாறிவிடுகிறது..


பல மாதங்களாக அவளை எவ்வாறாயினும் தனிமையில் சந்திக்க வேண்டும் என்று பெரும் ஆவலாய் இருந்தார்.. ஒரு நாள் மாலை பொழுது அவர் வாக்கிங் சென்று கொண்டிருந்தபோது ஒரு பூங்காவை கடந்த சென்றார்.. பூங்காவின் உள்ளே அந்தப் பெண் தனிமையில் அமர்ந்து தன்னை சுற்றி உள்ள பூந்தோட்டத்தை ரசித்துக்கொண்டிருந்தாள்.. காஷ்முஷிற்கு தனது இதயத்துடிப்பு நின்றதை போல உணர்ந்தார்.. பூங்காவின் உள்ளே சென்று அந்தப் பெண்ணின் பக்கத்தில் அமர்ந்தார்.. இருவரும் பார்த்தனர்.. அவருக்கு பேச்சு வரவில்லை இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சில வார்த்தைகள் பேசினார்.. அவளும் புன்முறுவலுடன்  கேட்டு கொண்டிருந்தார்.. அவளின் கையைப் பிடித்து உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறினார்.. 


பிறகு அவள் வீட்டு குழந்தைகள் அங்கு வர .. இவரும் அங்கிருந்து கிளம்பினார்.. சிறிது தூரம் நடந்தவர் திரும்பி வந்தார்.. அவர் முகமும் கண்களும் அவ்வளவு பிரகாசமாக இருந்தன.. அந்த பெண்ணிடம் கேட்டார்.. எவ்வளவு யோசித்தாலும் எனக்கு தெரியவில்லை.. எனது வீட்டிற்கு எந்தப் பக்கமாக செல்ல வேண்டும் என்று.. 


நம் காதலிக்கும் நபரை சந்திக்கும் போது அல்லது உடனிருக்கும் போது.. நாம் நம்முடைய இருப்பிற்கு (Center) தள்ளப்படுகிறோம்.. இது ஒரு ஆனந்த நிலை..பேரின்ப நிலை..(Blissful State). காதலிக்கும் நபரை பார்க்கும் போது இந்த உள்நிலை மாற்றம் நடக்கவில்லை என்றால் அது காதலே அல்ல.. இந்த உணர்வு.. இந்த அனுபவம்.. இது ஒரு ஷணம் என்றாலும் அதை நினைவு படுத்தி மகிழ்ச்சி அடைகிறோம்.. இது நமக்கு எப்போதும் கிடைக்க வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்கிறோம்.. அந்த நிலை தானாகவே நடந்த விஷயம்.. அதுவும் நமக்குள்ளே நடந்த விஷயம்.. 


அதற்கான முயற்சிகள் எடுக்கும் போது நமது மனது செயல்பட ஆரம்பிக்கிறது.. மற்றும் கட்டுப்பாடுகள் கொண்டு வரும்போது அது நடக்க வாய்ப்பே இல்லை.. 


இதில் உணர வேண்டிய விஷயம் என்னவென்றால் நாம் பல நாட்களாக மாதங்களாக எதிர்பார்த்து ஏங்கிய ஒரு விஷயம் நடக்கும் போது  நம் மனது செயலிழக்கிறது. (Mind stops working briefly) அப்போது நாம் நம் உள்நிலை இருப்பிற்கு செல்வதால் இந்த ஆனந்தம்.. திரும்பவும் மனது செயல்பட ஆரம்பிப்பதால் இந்த நிலையில் இருந்து விலகுகிறோம்.. 


மனது செயலிழக்கும் நிலை மிகச்சில தருணங்களில் நமக்கு நிகழ வாய்ப்பு இருக்கிறது.. நான் எனது குருவை முதலில் பார்த்தபோது அந்த பரவச நிலையை உணர்ந்திருக்கிறேன்.. கண்களில் இருந்து கண்ணீர் மழை.. என்னை சுற்றி இருப்பவர்கள் அவரிடம் பேசினாலும் எனக்கு வாயடத்துப் போனது..


நாம் நிறைய வேலை செய்து நம் மிகவும் களைத்துப் போகும் போது.. (Fatigue) மனதிற்கு என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நின்று போகும்.. எப்பொழுதும் நாம் நம்முடைய உள்நிலை ஆதார இருப்பிற்கு செல்கிறோம்.. காதலில் தியானத்தில் உணரும் அதே நிலையை சில கணங்களுக்கு நாம் உணருகிறோம்..


காதலில் இருப்பது.. தியானம் செய்வது இரண்டுமே நம்மை நம் இருப்பில் வைக்கும் விஷயமாக இருக்கிறது.. பெரிய  குறிக்கோள்களும்.. தான் எவ்வாறு ஆக வேண்டும் என்ற நாளை பற்றியே சிந்தனையிலேயே இருப்பவர்களும் (Becoming somebody) காதல் வயப்படுவதும் தியானம் செய்வதும் இயலாத காரியம்..


நாம் தொடர்வோம்……


மைத்ரேயி நிரஞ்சனா.. எழுத்தாளர், பேச்சாளர், பாடகி என பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார். இல்லத்தரசி என்ற நிலையிலும் சிறந்து விளங்குபவர். மதுரையில் பிறந்தவர், சேலத்தில் வசிப்பவர். அடிப்படையில் ஒரு பொறியாளர். கடந்த 15 வருடமாக ஆன்மீகம் மற்றும் தியானத்தில் அதிக ஈடுபாடு. ஒரே மனித குலம் அமைய வேண்டும் என்ற கனவுடன் வலம் வருபவர்.  ஆன்மிகம் மட்டுமே மனிதகுலத்தை பயமற்ற, போட்டியில்லாத புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், அங்கு பணம் மற்றும் போட்டிக்குப் பதிலாக அன்பு மட்டுமே அடிப்படையாக இருக்கும். பொறுப்புடன் கூடிய சுதந்திரமே புதிய மதமாக இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்