முக்கடல் சங்கமத்தில்.. முப்பாலை மொழிந்திடவே.. ஐயனின் சிலையொன்று.. அழகாய் நிற்கின்றதே!
Jan 16, 2026,03:31 PM IST
- இரா. மும்தாஜ் பேகம்
பஞ்சு போல் மேகக் கூட்டம்
பகவான் சிரசில் முத்தமிட
பாற்கடலின் அலைகள் எல்லாம்
பாதங்களை முத்தமிட
அரபிக்கடல் காற்று
அய்யனின் அங்கமெல்லாம் அரவணைக்க
அன்னை இயற்கையவள்
ஆனந்தமாய் கொஞ்சிடவே
முக்கடல் சங்கமத்தில்
முப்பாலை மொழிந்திடவே
ஐயனின் சிலை யொன்று
அழகாய் நிற்கின்றதே.
அமைதியை நாடிடவே
அன்புடைமை போதுமென்றான்
கருணையை பொழிந்திடவே
கயமையை நீக்க சொன்னான்.
ஒழுக்கத்தை உயிரை விட மேலாக
ஓம்ப சொன்னான்
ஒப்புரவால்;
வாழ்க்கையில்
வரும் கேட்டை ஏற்றமே வாழச் சொன்னான்.
பழிக்கஞ்சி நேர்மையாய் பொருளீட்டி
பகுத்துண்டு வாழ்ந்திடச் சொன்னான்
அழுக்காறு,அவா, வெகுளி, இன்னாச்சல்
இன்பமாய் வாழ்வதே அறம் என்றான்.
(எழுத்தாளர் இரா. மும்தாஜ் பேகம், திருச்சியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியை)