தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!
- இரா. மும்தாஜ் பேகம்
பெரியவர்களுக்கு எழுவதுவதை விட சிறியவர்களுக்கு அதாவது சிறார்களுக்கு எழுதுவது சாலச் சிறந்தது என்று சொல்வார்கள். காரணம், குழந்தைகளிடம் கற்றுக் கொள்ளும் திறன், கிரகிக்கும் திறன், உள்வாங்கும் திறன் அதிகமாக இருக்கும்.
அதனால்தான் சிலர் குழந்தைகளுக்காக எழுதுவதை அதிகம் விரும்புவார்கள். அது கவிதையாக இருந்தாலும் சரி, பாடலாக இருந்தாலும் சரி, கட்டுரையாக இருந்தாலும் சரி, ஈஸியாக அது போய்ச் சேர்ந்து விடும். சினிமாப் பாடல்களைக் கூடப் பாருங்கள்.. ரைம்ஸ் பாணியில் எழுதும் பாடல்தான் சூப்பர் ஹிட் ஆகிறது. காரணம் இதுதான்.
சரி அதை விடுங்க.. வாங்க நம்ம தொந்தி மாமாவைப் பார்ப்போம்.. !
தொந்தி மாமா வந்தாராம்.
தொப்பிய தலையில் போட்டாராம்.
சாக்கு பையை எடுத்தாராம்.
சறுக்கி கீழே விழுந்தாராம்.
அ.. ஆ என்று அலறியே அவரும் வலியால் துடித்தாராம்.
அருகிலிருந்தோர் பார்த்ததுமே இ.... ஈ.என்றே சிரித்தனராம்.
உ,ஊ என்று கூறியே
உடனே எழுந்து நின்றாராம்.
சீனி மிட்டாய் எடுத்தாராம்.
சிரித்தோர்க்கெல்லாம் கொடுத்தாராம்.
ஈ....ஈ என்றே சிரித்தவர்கள்.
ஒ... ஓ என்றே வியந்தனராம்.
ஐ...ஐ என்று கூறியுமே ஆடிப்பாடி மகிழ்ந்தாராம்.
(எழுத்தாளர் இரா. மும்தாஜ் பேகம், திருச்சியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியை)