தமிழக தேர்தலில் அதிர்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் பின்னடைவு!

Meenakshi
May 04, 2026,09:57 AM IST

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் முக்கிய அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலினே கொளத்தூர் தொகுதியில் பின்னடைவில் உள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் பின்தங்கியே உள்ளார்.


2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் ஆரம்பக் கட்ட நிலவரப்படி பின்னடைவைச் சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.


முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதிகளில் பின்னடவைச் சந்தித்துள்ளனர்.




அதேபோல பெரும்பாலான அமைச்சர்கள் குறிப்பாக மூத்த அமைச்சர்கள் பலரும் பின்னடவைச் சந்தித்து வருகின்றனர்.


மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், காட்பாடி தொகுதியில் துரைமுருகன், திருச்சுழி தொகுதியில் தங்கம் தென்னரசு, ஆலந்தூர் தொகுதியில் அன்பரசன், மன்னார்குடி தொகுதியில் டிஆர்பி ராஜா, தூத்துக்குடி தொகுதியில் கீதா ஜீவன், திருச்சி மேற்கில் அமைச்சர் நேரு ஆகியோர் பின்னடைவில் உள்ளனர்.


அதிமுகவிலும் பல முன்னாள் அமைச்சர்கள் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர். மதுரை மேற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் பின்னடைவில் உள்ளார். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும் பின்னடைவில் உள்ளனர்.