சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணும் பணி இன்று காலை துவங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் இறுதி முடிவுகள் முழுமையாக எப்போது வெளியாகும் என தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழக சட்டசபை தேர்தல் 2026 ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்றது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பதிவான ஓட்டுக்கள் இன்று தமிழகம் முழுவதும் 65,000 ஓட்டு எண்ணும் மையங்களில் நடந்து வருகிறது. காலை 8 மணிக்கு துவங்கிய ஓட்டு எண்ணிக்கையில் முதலில் 234 தொகுதிகளிலும் பதிவான தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. திமுக கூட்டணி 14 தொகுதிகளிலும், அதிமுக மற்றும் தவெக முறையே 2 தொகுதிகளிலும் தபால் ஓட்டுக்களில் முன்னிலை பெற்றுள்ளன.

தபால் ஓட்டுக்களை தொடர்ந்து காலை 08.35 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி துவங்கும். மொத்தம் 15 சுற்றுக்களாக இந்த ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஒவ்வொரு சுற்று ஓட்டு எண்ணிக்கையும் சுமார் 35 நிமிடங்கள் நடைபெறும். 15 சுற்று ஓட்டு எண்ணிக்கை நிறைவடைந்து, மாலை 5 மணிக்கு தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஓட்டு எண்ணும் பணி நிறைவடைந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும்.
இழுபறியாக உள்ள தொகுதிகள், ஓட்டு எண்ணிக்கையில் பிரச்சனை ஏற்படும் தொகுதிகளின் முடிவுகள் வெளியாவதில் மட்டும் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது தவிர பெரும்பாலான தொகுதிகளின் வெற்றி நிலவரங்களை மாலை 6 மணிக்கு முன்பாக தேர்தல் கமிஷனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விடும்.
ஆசிரியர் அளித்த அற்புதம்!
Short Story by N Deepalakshmi: நிலக்கடலை அக்கா
திருமலை திருப்பதி வருடாந்திர பிரம்மோற்சவம்.. இன்று தீர்த்தவாரி.. குவிந்த பக்தர்கள்
முகம் மலரோ தாமரைப்பூ.. மனம் மணமோ மல்லிகைப்பூ!
வேறு முகங்கள்!
நூலகமும் நானும்.. மயிலாப்பூர் முதல் பாஸ்டன் வரை!
அமைதியா இரு
Short Story by Sudha Thirunarayanan: பை!
தலையங்கம்: நாட்டின் பாதுகாப்பில் பெண்மையின் பேராற்றல்.. CRPF Women Battalion turns 40!
{{comments.comment}}