English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

Su.tha Arivalagan
Apr 23, 2026,02:57 PM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed


ஆங்கில மொழி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் உலகளவில் ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக கொண்டாடப்படுகிறது.

 

பிரபல ஆங்கில எழுத்தாளர் William Shakespeare அவர்களின் பிறந்தநாள் மற்றும் மறைந்த நாள் ஏப்ரல் 23 ஆகும். 


ஆங்கிலத்தில் சிறந்து விளங்கிய William Shakespeare அவர்களை நினைவுபடுத்துவதற்காக இன்றைய தினத்தை உலக ஆங்கில தினமாக கொண்டாடப்படுகிறது.


நாம் படிக்கும் காலத்தில் ஆங்கிலத்தில் 35-40 மதிப்பெண்கள் எடுத்தாலே போதும் என்று படித்தோம் . அன்றைய காலகட்டத்தில் ஆங்கிலத்தில் மோகம் அந்த அளவு பெரிதாக மக்கள் உணரவில்லை.


இன்றைய காலகட்டத்தில் ஆங்கிலத்தின் மதிப்பை நன்கு உணர்ந்து உள்ளார்கள். மாணவர்கள் ஆங்கிலத்திலும் தமிழ்மொழி போல் சிறந்து விளங்குவதை பார்க்க முடிகிறது. 




இரு மொழி கல்வி கொள்கையான தமிழ் மற்றும் ஆங்கிலம் அவசியம் என்பதை உணர்ந்து படிப்பதை பார்த்து பெருமை அடைவோம்.


நாம் மேல்நிலைப் படிப்பு படித்த பிறகு உயர் கல்வி படிப்பதற்கு ஆங்கில கல்வி அவசியம் என்பதை உணர்ந்து ஆங்கில வழி கல்வி முறையை அதிக மக்கள் தேர்ந்தெடுத்து உள்ளார்கள்.  


அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் ஆங்கிலத்தில் கல்வியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஆங்கில வழி கல்வி முறையும் அரசு பள்ளியில் செயல்பட்டு வருவது பாராட்டுதற்குரியதாகும்.


தங்களது குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசினால் பெருமையாக இருக்கும் என்று கருதி Spoken English கற்றுக்கொண்டு  ஆங்கிலத்தில் பேசி வருவதை பார்க்க முடிகிறது.


IT போன்ற வேலைகளில் ஈடுபடுவதற்கும் ஆங்கிலம் அவசியம் என்பதால் பல மக்கள் ஆங்கிலத்தில் பேசுவதை பார்க்க முடிகிறது.


நாம் எந்த மாநிலத்திற்கு அல்லது வேறு நாடுகளுக்கு சென்றாலும் அந்த மொழியை நாம்  தெரிந்து கொள்ளவில்லை என்றாலும் பொதுவாக ஆங்கிலத்தில் பேச தெரிந்தால் நம்மால் அவர்களுடன் பழக முடியும் என்பதை உணர்ந்து பார்த்து நாம் அனைவரும் ஆங்கிலத்தை கற்றுக்கொண்டு ஆங்கிலத்தில் பேசி மகிழ்வோம். 


ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தினமும் 5 வார்த்தைகள் ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுத்து  அவர்களை ஆங்கிலத்தில் சரளமாக பேச செய்வோம் .


இன்று ஆங்கில மொழி தினத்தில்  நாம் அனைவரும் நமக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் பேசி கொண்டாடுவோம்.


(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். அருள் தமிழ் இலக்கியம், மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். 

ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள்  போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார்.)