ஐப்பசி கிருத்திகை.. முருகனுக்கு உகந்த நாள்.. விரதம் இருந்தால் வேண்டியது கிடைக்கும்
- ஸ்வர்ணலட்சுமி
ஐப்பசி கிருத்திகை இன்று.. விசுவாவசு வருடம் 20 25 நவம்பர் மாதம் ஆறாம் நாள் வியாழக்கிழமை ஆன இன்று கிருத்திகை விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இவ்விரதம் முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படுவதனால்,முருக பெருமான் பக்தர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
கிருத்திகை நட்சத்திரம் முருகனின் ஆட்சி நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நாள் விரதம் இருந்து வழிபடுவதனால், முருகனின் அருள் முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகம்.
கிருத்திகை விரதம் இருப்பதனால் ஏற்படும் நன்மைகள்:
வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.
கடன் பிரச்சினைகள், நிதி பிரச்சனைகள், தொழிலில் ஏற்படும் தடைகள் ஆகியவை அகலும்.
இந்த நாளில் மேற்கொள்ளும் விரதம் மனதிற்கு அமைதியை ஏற்படுத்தி,உடல் நலத்தை மேம்படுத்தும்.
கிருத்திகை என்பது முருகப் பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களை கௌரவிக்கும் விதமாக அவர்களின் பெயரிலேயே
இந்த நட்சத்திரம் அழைக்கப்படுகிறது. இந்த விரதம் இருப்பவர்களுக்கு துன்பங்களை நீக்கி நன்மை பெருக்கும். குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த விரதம் கடைபிடிப்பதனால் குழந்தை பேரு அவர்களுக்கு கட்டாயம் கிடைக்கும். செல்வ செழிப்பு பெருகும்.
கிருத்திகை விரதத்தை முன்னிட்டு அனைத்து முருகன் ஆலயங்களிலும், அறுபடை வீடுகளிலும், சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறுகிறது.
கார்த்திகை விரதம் சிலர் கடுமையான விரதத்தை மேற்கொள்வார்கள். முருகப்பெருமானுக்கு "கார்த்திகேயன் "எனும் பெயர் உண்டு. முருகப்பெருமான் அருளை பெற விரதம் இருக்கும் நாளாக இந்த கார்த்திகை விரதம் பார்க்கப்படுகிறது. இந்த விரத வழிபாட்டை கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை நட்சத்திர நாளில் நாம் தொடங்கி வாழ்க்கை முழுவதும் மேற்கொண்டால் மிகப்பெரிய அளவில் முருகரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
கார்த்திகை விரதம் மேற்கொள்பவர்கள் கந்த சஷ்டி கவசம்,கந்த குரு கவசம், கந்தர் அனுபூதி, வேல்மாறல் போன்ற முருகனுக்கு உகந்த பாடல்களை படிப்பது சிறப்பு. அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று கோவிலில் அமர்ந்தும் படிக்கலாம். இம்மாதம் கார்த்திகை விரதம் இருப்பவர்கள் அன்றைய நாளில் அன்னதானம் செய்வது அதீத சிறப்பு.
கார்த்திகேயன் சுலோகங்கள் மற்றும் பலன்கள் :
"ஓம் கந்தாய நமஹ "- இம்மந்திரத்தை உச்சரிப்பதனால் வலிமை மற்றும் உற்சாகம் கிடைக்கும்.
"ஓம் சுப்ரமணியன் நமஹ"- தடைகள் விலகும்.
"ஓம் வேலாயுதாய நமஹ"- வேகம் மற்றும் வளர்ச்சி ஏற்படும்.
" ஓம் ஸ்வாமிநாதாய நமஹ "முருகனின் கருணையும் ஆசியும் கிடைக்கும்.
"கந்த சஷ்டி கவசம் ","கந்த குரு கவசம் "பாராயணம் செய்வதன் மூலம் வாழ்க்கையில் பல நன்மைகள் அடையலாம்.
இன்று பிறந்தநாள் மற்றும் திருமணநாள் கொண்டாடும் அனைத்து தென்தமிழ் வாசகர்களுக்கு தென் தமிழ் சார்பாக நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.