- ஸ்வர்ணலட்சுமி
ஆறுமுக கடவுள் ஆன முருகப்பெருமான் வழிபாட்டில் காவடி எடுப்பது விசேஷமான ஒன்றாகும்.
காவடி என்றால் என்ன?..
காவடி என்பது ஒரு பொருள் அல்லது சுமக்கும் தடி யாகும்.இதனை பக்தர்கள் தங்கள் தோள்களில் சுமந்து, முருகப்பெருமானுக்கு நன்றி தெரிவித்து, வேண்டிக் கொண்டதை நிறைவேற்ற செய்யப்படும் ஒரு நேர்த்திக்கடன் ஆகும். முருக பக்தர்கள் தங்களுடைய வேண்டு தல்கள் நிறைவேறிய பின் காவடி எடுத்து தங்களுடைய பிரார்த்தனைகளை செலுத்துவது வழக்கம். காவடி எடுக்கும் பழக்கம் எப்படி வந்தது ? அதற்கு ஒரு புராணக்கதை உண்டு..
அகத்தியர் பொதிகை மலைக்கு வந்து தங்கிய பொழுது தன் சிஷ்யனான இடும்பனை அழைத்து தன்னுடைய வழிபாட்டிற்காக கயிலையில் சிவசக்தி ஸ்வரூபமாக விளங்கும் கந்தனுக்குரிய சிவகிரி, சக்தி கிரி எனப்படும் இரு சிகரங்களையும் கொண்டு வரும்படி ஆணையிட்டார்.
அகத்தியரின் கட்டளைக்கு இணங்கி சிவகிரி சக்தி கிரி இரண்டு மலைகளையும் தூக்கி எடுத்து காவடி போல் தன் தோளில் சுமந்து வந்தான். ஆனால் முருகப்பெருமான் அவ்விரு சிகரங்களும் திருவாவினன்குடியில் நிலை பெற்று இருக்க வேண்டும் என்று முருகன் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார். முருகன் அரசனைப் போல் வேடம் அணிந்து இடும்பனை திருவாவினன் குடிக்கு வந்து சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு பிறகு தன் பயணத்தை தொடருமாறு கூறினார். இடும்பனும் அவ்வாறே இரு சிகரங்களையும் கீழே வைத்து ஓய்வெடுத்த பிறகு அவற்றை தூக்க முற்பட்டான். ஆனால் அவை இரண்டும் அசைக்க கூட முடியவில்லை. அப்போது சிவகிரியின் மேல் ஒரு சிறு பாலகன் கோவணத்துடன் இருப்பதை கண்டு மிகுந்த கோபமடைந்த இடும்பன் அச்சிறுவனை தாக்க முற்பட்டான். அக்கணமே வேரற்ற மரம் போல் பூமியில் சாய்ந்தான். அகத்தியர் இடும்பன் வராததை ஞான திருஷ்டியில் அறிந்து கொண்டு முருகப்பெருமானிடம் தன் சீடன் இடும்பனை காக்க வேண்டி நின்றார். முருகனும் அருளாசிபுரிந்து தன் காவல் தெய்வமாக இடும்பனை அமர்த்திக் கொண்டார். காவடி எடுத்து வரும் பக்தர்களுக்கு அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவதாகவும், அருள் வாக்கினை அளித்தார். இதிலிருந்து தான் முருகப்பெருமானுக்கு காவடி எடுக்கும் பழக்கம் வந்தது என்று கூறப்படுகிறது.
பழனி மலை பாதையில் தொடக்கத்திலேயே ஒரு பாதை செல்கிறது.அதில் இடும்பன் காவடி தூக்கி வரும் சிற்பமும், அகத்தியர் வழிபட்ட சிவலிங்கம், வடிவேலர் சன்னதியும் உள்ளதை காணலாம். இந்த சிற்பங்களே காவடி எடுக்கும் வழக்கத்திற்கு விளக்கம் தரும் ஆதார கதையாக அமைந்திருக்கிறது.
காவடி என்பது இரு முனைகளிலும் பொருட்களை கட்டி தொங்கவிடப்பட்ட ஒரு தண்டாகும். இந்த தண்டில் பால் குடங்கள், மயிலிறகுகள் போன்ற பல்வேறு பொருட்களை பக்தர்கள் சுமந்து செல்வார்கள். காவடி எடுப்பதன் நோக்கம் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றவும்,கடன் தீர்க்கவும்,நோய் குணமடையவும், முருகனிடம் பக்தியுடன் வேண்டுதல் வைத்து காவடி ஆடுவார்கள். காவடி ஆட்டம் என்பது வெறும் நடனம் மட்டுமல்ல இது இசை,பக்தி, தியாகம் மற்றும் விடா முயற்சியின் அடையாளமாகும்.
காவடியில் பல்வேறு வகைகள் உண்டு.
பால் காவடி,பன்னீர் காவடி, சந்தன காவடி, தீர்த்த காவடி, அன்னக்காவடி,இளநீர் காவடி,அலங்கார காவடி, மச்சக்காவடி, சர்ப்ப காவடி, தூக்கு காவடி,தங்க காவடி, வெள்ளி காவடி, அக்னி காவடி என பல வகைகள் உண்டு. காவடி எடுப்பது பெரும்பாலும் தைப்பூச திருநாளில் மிகவும் பிரசித்தியாக நடைபெறும். காவடி எடுப்பதனால் பக்தர்கள் அவரவர்களுடைய துயரங்கள்,தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் மட்டுமின்றி புண்ணியம்,இன்பம் ஆகியவற்றையும் சுமந்து சென்று முருகனின் காலடியில் சமர்ப்பிப்பது ஆகும்.
காவடி எடுத்து வழிபாடு செய்வதினால் நமது அனைத்து கஷ்டங்களும் நீங்கி வாழ்க்கையில் இன்பம் நிலைத்து நிற்கும். அனைவரும் முருகப்பெருமானின் அருள் பெற்று கந்த சஷ்டி இரண்டாம் நாளான இன்று சகல சௌபாக்கியங்கள் பெற்று வாழ்வோமாக.
மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு
ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை
ஐங்கரன் (நெடுங்கதை)
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்
கொடிது கொடிது இளமையில் வறுமை!
இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்
{{comments.comment}}