திருச்சி: பிரதமர் நரேந்திர மோடி இன்று திருச்சி வருகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரமாண்ட கூட்டத்தில் பேசும் அவர் ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.
சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு மற்றும் கேரளத்திற்கு பிரதமர் மோடி இன்று வருகை தரவுள்ளார். தமிழ்நாட்டுக்கு குறுகிய காலத்தில் அவர் 3வது முறையாக வருகிறார். இதற்கு முன்பு மதுராந்தகம், மதுரை ஆகிய இடங்களில் நடந்த பிரமாண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டங்களில் கலந்து கொண்டு அவர் பேசினார்.
இந்த நிலையில் இன்று மாலை திருச்சி வருகிறார் பிரதமர் மோடி. அங்கு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசவுள்ளார்.

சமீபத்தில் திருச்சி சிறுகனூரில் நடந்த திமுக மாநில மாநாட்டின்போது பேசிய முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசும்போது தமிழ்நாட்டில் காவிகளுக்கு இடமில்லை என்று கூறியிருந்தார். மேலும் அதிமுகவை விழுங்குகிறது பாஜக என்றும் அவர் கடுமையாக சாடியிருந்தார்.
முதல்வரின் இந்தப் பேச்சுக்களுக்கு இன்றைய கூட்டத்தில் பிரதமர் மோடி பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கம் போல இக்கூட்டத்திலும் கூட்டணிக் கட்சிகளான அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். பிரதமரின் கூட்டத்துக்காக பஞ்சப்பூர் பகுதியில், பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ரூ. 5650 கோடி திட்டங்கள்
மேலும் தனது பயணத்தின்போது ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டவும் உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ரூ. 3,680 கோடி முதலீட்டில் அமைக்கப்படவுள்ள நகர எரிவாயு விநியோகக் கட்டமைப்பிற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இது சுமார் 8.8 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு வழங்க உதவும்.
சென்னை மணலியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (IOCL) ரூ. 1,490 கோடி மதிப்பிலான மசகு எண்ணெய் கலவை ஆலை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் சுமார் 370 கி.மீ தூரத்திற்கு 89 கிராமப்புற சாலைகளைத் திறந்து வைக்கிறார். மேலும், இரண்டு 'அம்ருத் பாரத்' விரைவு ரயில்கள் உட்பட புதிய ரயில் சேவைகளையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
கேரளாவில் ரூ. 10,800 கோடி திட்டங்கள்
முன்னதாக, இன்று மதியம் சுமார் 1:30 மணியளவில் எர்ணாகுளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ. 10,800 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் கொச்சி சுத்திகரிப்பு நிலையத்தில் ரூ. 5,500 கோடி மதிப்பிலான பாலிப்ரோப்பிலீன் உற்பத்தி பிரிவிற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
தேசிய நெடுஞ்சாலை 66-ல் தலப்பாடி-செங்களா பிரிவு மற்றும் கோழிக்கோடு பைபாஸ் ஆகியவற்றை ஆறு வழிச்சாலையாக மாற்றும் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.
ஷொர்ணூர் சந்திப்பு, குட்டிப்புரம் மற்றும் சங்கனாச்சேரி ஆகிய ரயில் நிலையங்களின் மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைப்பதுடன், பாலக்காடு - பொள்ளாச்சி இடையே புதிய ரயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}