காவியத் தாயின் இளைய மகன்.. காலத்தை வென்ற கண்ணதாசன்!
- பாரதிராஜன்
முத்தைய்யா என்ற இளைஞன் எப்படி கண்ணதாசன் ஆனார்!
வேலை தேடி வந்த இடத்தில் கவிதை கொடுத்த பின் பெயரைக் கேட்டதில் சுவரில் மாட்டி இருந்த கண்ணன் படத்தைப்
பார்த்து கண்ணதாசன் என்றார்.
இப்படி ஆன கண்ணதாசன் காதல், தத்துவம், அழுகை, நகைச்சுவை, ஒப்பாரி, தேசம் எதைப் பற்றிப் பாடவில்லை!
கல்லைத் தான் மண்ணைத்தான் பேப்பரில் படித்த பின் எழுதிய பாட்டு தான் அத்தான் என்னத்தான் என்னத்தான் எப்படி சொல்வேனடி !
பழனியில் வந்த அண்ணன் என்னடா தம்பி என்னடி பாடல் கவிஞரின் சகோதரன் பணம் தரமறுத்த போது வந்த பாடல் அது!
பாவமன்னிப்பில் வந்த எல்லோரும் கொண்டாடுவோம் பாடல்!
ராமன் என்பது கங்கை நதி என ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு பாடல் யாரால் மறக்க முடியும்!
நான் நிரந்தரமானவன் என எழுதிய கவிஞர் நிச்சயம் காலத்தை வென்றவன் தான் சந்தேகமே இல்லை!
(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)