இல்லத்தரசி!

Su.tha Arivalagan
Nov 03, 2025,12:32 PM IST

- கா. சா. ஷர்மிளா


 கோவிலுக்குள்  சிலைகள் அழகம்மா...

வீட்டிற்குள் நீயே அழகம்மா...!


அரியணை இல்லா அரசாங்கம் அம்மா..

அவ்வரசங்கத்தின் அரசியே நீயம்மா...!


சுறுசுறுப்பாக தேனீக்கு இணையாக 

உழைப்பவள் நீயம்மா...!

என் இல்லக்கூட்டிக்கு ராணி நீயம்மா...!


எனது இல்ல முதல் மருத்துவரே நீயம்மா..!




எனது இல்ல முதல் சேமிப்பு வங்கி நீயம்மா...!


அன்புக்கும் அக்கறைக்கும் நீயே எடுத்துக்காட்டம்மா..!


தன்னாசை விருப்பங்களை கணவன் குழந்தைகளுக்காக விட்டுக் கொடுப்பவள் அம்மா...!


முன்னெழுந்தே பின் தூங்குபவளே  நீயம்மா...!


ஒருநாள் கூட விடுப்பு இல்லா உன்வேலையம்மா...! 


 அத்துணை திறமைகளின் அரசியம்மா...!


 உன் திறமைகள் வீட்டில் பூச்சியாய் இருக்குதம்மா....!


வான்வெளியில் வெண்ணிலாவாய் ஒளிருதம்மா...!   


தாய் வீட்டில் தாரகையாய்.... புகுந்த வீட்டில்  இல்லத்தரசியாய்...!


பவனிவரும் உனக்கு என்  மனமார்ந்த தேசிய இல்லத்தரசி தின வாழ்த்துக்கள் 


(இன்று தேசிய இல்லத்தரசிகள் தினம் கொண்டாடப்படுகிறது)


(கா.சா.ஷர்மிளா, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு. முட்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (இந்து)யில் பணியாற்றுகிறார்)