- வ.சரசுவதி
அம்மாவின் மௌனம்
அம்மாவின் மௌனங்களில்...
அதிகமாய் வலி இருக்கும்
நிறைவேறாமல் போன
ஒரு ஏக்கம் இருக்கும்
தெரிந்தோ தெரியாமலோ
நாம் காட்டிய கோபத்தின்
தாக்கம் இருக்கும்
திரும்ப வந்து பாசமாய்
நாலு வார்த்தை பேசமாட்டார்களா
என்ற ஏக்கம் இருக்கும்

தன் வயதை நினைத்து
பயம் இருக்கும்
அம்மாவை அதிகமாய் மௌனங்களோடு
பேச விடாதீர்கள்
பழகிவிட்டால் புன்னகையை மறக்கக்கூடும்...
அம்மாவின் மௌனம் வீட்டையே ஆட்டி வைக்கும்
அவளின் மௌன அலைகளின் சத்தம் வீடு எங்கும் கேட்கும்
எரிமலையாய் அவளின் மௌனம் கலைய
வேண்டாம் என வீடு எதிர்பார்க்கும்
எதற்காக இந்த மௌனம் என எவருக்குமே புரியாது
புரிந்து கொள்ளவும் முடியாது
காரணத்தையும் அவளே மௌனமாக செரித்துக் கொள்வாள்
மௌனமாய் இருப்பினும் செயல்பாடுகளில் அவள் என்றும் சக்கரம்
அம்மாவை அதிகமாக மௌனங்களோடு பேச விடாதீர்கள்
சிறு அழைப்பும் அணைப்பும் போதும்
அந்த மெளனம் கலைய...!
(கதாசிரியர் வ.சரசுவதி. செள. பொட்டிப்புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இடை நிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பல்வேறு தளங்களில் கவிதை, கட்டுரைகள்)
70 வயதிற்கு மேற்பட்ட நிர்வாகிகளுக்கு பதவி கிடையாது: திமுக தலைமை அதிரடி
Short Story: "யாரும்மா அது? ஞாயிற்றுக்கிழமைல!
சிந்தனைச் சிதறல்.. நமக்கு மறுக்கப்பட்டது.. அவர்களுக்கு வழங்கப்படுகிறது!
Egypt Tour Diary: பேசும் சிலை!
தினம் தினம் கொண்டாட்டமா?
கொசுவின் அங்கலாய்ப்பு!
மறைந்தாலும் நன்று...!
உனைப் போற்றி வாழ்கின்ற என்னை வாழ வைக்கிறாய்!
வட்ட நிலா பொட்டுக்காரி வாழைப்பூக் கொண்டக்காரி
{{comments.comment}}