சென்னை: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் வேகமாக நெருங்கி வரும் நிலையில் கூட்டணி குறித்த பேச்சுக்களும், செயல்பாடுகளும் புயல் வேகத்தில் போய்க் கொண்டுள்ளன. இந்த நிலையில் தேமுதிக தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
தேமுதிக ஆரம்பத்தில் தனித்துப் போட்டியிட்டது. பின்னர் அது கூட்டணி அரசியலுக்கு மாறியது. கேப்டன் விஜயகாந்த் இருந்தபோது முதலில் அதிமுக, பின்னர் பாஜக, பிறகு மக்கள் நலக் கூட்டணி என்று மாறி மாறி பயணித்தது. அதன் பிறகு விஜயகாந்த் மறைவுக்குப் பின்னர் அதிமுக கூட்டணிக்கு மாறி கடந்த மக்களவைத் தேர்தலை சந்தித்தது.
மக்களவைத் தேர்தலில் கேப்டன் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன், விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார். ஜெயித்து விடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தார். இந்த நிலையில் வருகிற சட்டசபைத் தேர்தலில் யாருடன் தேமுதிக கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

திமுக மற்றும் அதிமுக தரப்பில் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை தேமுதிக இதுவரை உறுதிப்படுத்தவில்லை. யாருடனும் பேசவில்லை என்றுதான் கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். இருப்பினும் ஏதாவது ஒரு கூட்டணியில் தேமுதிக சேர்ந்துதான் போட்டியிட முடியும். இல்லாவிட்டால் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் ஆபத்தும் உள்ளது.
இதற்கிடையே, தேமுதிக சார்பில் யாரெல்லாம் இந்த முறை போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு பலமாக உள்ளது. விஜயகாந்த் குடும்பத்தைப் பொறுத்தவரை தற்போது பிரேமலதா விஜயகாந்த், அவரது தம்பியான சுதீஷ் மற்றும் விஜய பிரபாகரன் ஆகியோர் அரசியலில் உள்ளனர்.
இதில் பிரேமலதா விஜயகாந்த், தனது கணவர் விஜயகாந்த் எம்எல்ஏவாக இருந்த விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்துள்ளார். எல்.கே.சுதீஷ், கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைடந்துள்ளார். விஜயபிரபாகரன், தனது தந்தையின் சொந்த ஊர் அடங்கிய விருதுநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்துள்ளார்.
வருகிற சட்டசபைத் தேர்தலில் மூன்று பேரும் போட்டியிடுவார்களா அல்லது பிரேமலதா மட்டும் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கட்சியில் சீட் கேட்டு சீனியர்கள் பலரும் நெருக்கி வருவதால் பிரேமலதா விஜயகாந்த் மட்டும் போட்டியிட அதிகமான வாய்ப்புகள் உள்ளன. அப்படி போட்டியிடுவதாக இருந்தால் விருத்தாச்சலம் அல்லது ரிஷிவந்தியம் ஆகிய தொகுதிகளில் ஒன்றில் பிரேமலதா போட்டியிட வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இந்த இரண்டு தொகுதிகளுமே விஜயகாந்த் உறுப்பினராக இருந்தவைதான். முதலில் விருத்தாச்சலத்தில் விஜயகாந்த் உறுப்பினராக இருந்தார். பின்னர் ரிஷிவந்தியத்திற்கு மாறினார். இதில் பிரேமலதா ஏற்கனவே விருத்தாச்சலத்தில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தவர் என்பதால் இந்த முறை ரிஷிவந்தியத்தில் போட்டியிட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஒரு வேளை அவர் போட்டியிடாவிட்டால், அவருக்குப் பதில் விஜய பிரபாகரன் போட்டியிட வாய்ப்புகள் அதிகம். அவரும் இல்லாவிட்டால் சுதீஷ் நிற்கலாம். நிச்சயம் விஜயகாந்த் போட்டியிட்ட தொகுதிகளில் குடும்பத்தினரே போட்டியிடவே வாய்ப்புகள் அதிகம் என்று சொல்கிறார்கள்.
இப்படி தேமுதிகவுக்குள் சில விஷயங்கள் ஓடிக் கொண்டுள்ள நிலையில் மறுபக்கம் கூட்டணி தொடர்பான இழுபறிகளும் நீடித்துக் கொண்டுள்ளன.
"காங்கிரஸ், பாஜக.,வுக்கு இருப்பது ஒரே ஜீன் தான்" நீட் விவகாரத்தில் சி.வி.சண்முகம் காட்டமான விமர்சனம்
21 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
Travel story: சொகுசுக் கப்பலின் மொட்டை மாடியில் அமாவாசை தர்ப்பணம்.. அசந்து போன அமெரிக்கர்!
விநாயகர் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி.. ஆவணி மாத சிறப்புகள்!
Short Story: ரிசர்வ் பெட்டியில் ஒரு அன்ரிசர்வ் கலாட்டா!
கடந்த காலத்தின் பசுமை நினைவுகள்
வளர்ந்து வரும் சகிப்புத்தன்மையும் அமைதிப் பேணலும்!
Tamil Short Story: தந்தையாகிய தமையன்!
கோடைக்கால மேகம்
{{comments.comment}}