பார்லிமென்ட்டில் புயலை கிளப்பிய திமுக அமைச்சரின் பேச்சு...திமுக-காங்கிரஸ் கடும் மோதல்

Feb 05, 2026,06:45 PM IST

டில்லி : தமிழக திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வடமாநில தொழிலாளர்கள் குறித்து பேசிய பேச்சு, பார்லிமென்ட்டில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. இதன் காரணமாக திமுக, காங்கிரஸ் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இது இந்தியா கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


சமீபத்தில் செங்கல்பட்டில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய திமுக பிரமுகரும், தமிழக வேளாண் துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தமிழகத்தில் டேபிள் துடைப்பதற்கும், கட்டுமான வேலை செய்வதற்கும், பானிபூரி விற்பதற்கும் தான் வடமாநில தொழிலாளர்கள் இங்கு வருகிறார்கள். காரணம், அவர்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும். அவர்களின் மாநிலங்களில் வேலை இல்லை. அதனால் பிழைப்பிற்காக தமிழகத்தை தேடி வருகிறார்கள் என தெரிவித்தார்.




அமைச்சரின் இந்த பேச்சிற்கு தமிழக பாஜக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழக பாஜக.,வின் எக்ஸ் தள பக்கத்தில், அனைத்து மாநிலத்தை சேர்ந்தவர்களும் வேலைக்காக பல மாநிலங்களில் இடம்பெயர்ந்து தான் வாழ்கிறார்கள். உலகம் முழுவதும் வேலைக்காக பல பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து தான் வாழ்கிறார்கள். இதில் வடக்கு, தெற்கு என பேசுவதற்கு ஒன்றும் இல்லை. வேலையில் சிறிது, பெரியது என எதுவும் கிடையாது.  திமுக.,வினர் தொடர்ந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவமதித்து வருகிறார்கள். குறிப்பாக இந்தி பேசும் தொழிலாளர்கள் இழிவுபடுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள், குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இது போன்ற பேச்சுக்கள் மிகவும் ஆபத்தானவை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்நிலையில் திமுக அமைச்சரின் பேச்சு லோக்சபாவிலும் எதிரொலித்தது. திமுக அமைச்சரின் பேச்சு ஏற்றுக் கொள்ள முடியாதது என காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் மிக கடுமையாக விமர்சித்தார். இதற்கு திமுக எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பார்லிமென்டில் திமுக - காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள மோதல் இந்தியா கூட்டணியிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 


ஏற்கனவே தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் இடையே பல்வேறு பிரச்சனைகள் ஓடிக் கொண்டிருக்கிறது. திமுக- காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற சந்தேகம் அனைவரிடமும் ஏற்பட துவங்கி விட்டது. இந்த நிலையில் திமுக அமைச்சரின் பேச்சு, கூட்டணியையே முறிய செய்து விடுமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடக்கம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

news

அதிமுக.,வில் முற்றும் மோதல்... கே.சி. வீரமணி மனமாற்றம்.. ஆளுநரை சந்திக்க இபிஎஸ் திட்டம்

news

முதல்வர் விஜய் நெற்றியை கவனிச்சீங்களா? கருப்பு மைக்கு பின்னால் இருக்கும் சீக்ரெட்

news

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிவு.. ரூ.96.11 ஆகக் குறைந்தது

news

நாககோட்டி டூ சேஷ்நாக்.. 4 கிலோமிட்டர் சுமந்து சென்ற லீலா.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 6)

news

IPL 2026: மும்பை இந்தியன்ஸ் வெற்றியால்.. சென்னை சூப்பர் கிங்ஸ் ஹேப்பிண்ணே!

news

NEET.. நீட் தேர்வு முறையில் பெரும் மாற்றம் வருகிறது.. அடுத்த ஆண்டு முதல் கம்ப்யூட்டரில் தேர்வு!

news

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: காலையிலேய ஹேப்பி நியூஸ் சொன்ன முதல்வர் விஜய்

news

அறிவுக் கூர்மையும் புத்திசாலித்தனமும் (Intellect and Intelligence)

அதிகம் பார்க்கும் செய்திகள்