- சசிகலா விஸ்வநாதன்
சந்திரிகை ஆயாசத்துடன் கண்களை மூடிக் கொண்டாள். ஆறு மாதம் முன்புதான் மருத்துவர்கள் அவளுக்கு கல்லீரலில் இரண்டாம் நிலை புற்று நோய் என்று கண்டுபிடித்தார்கள் சிகிச்சைகள் மும்முரமாய் தொடர,அது வரை கூட நன்கு நடமாடிக் கொண்டிருந்தவளை, ஒரேயடியாக படுக்கையில் போட்டுவிட்டது.
அவள், தான் மட்டும்தான் அந்த வீட்டில் எல்லாமாய் இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு,ஏமாற்றம். வீடு அழகாக இயங்கிக் கொண்டிருந்தது. சமையலுக்கு பாகிரதி மாமியை ஏற்பாடு பண்ணியாச்சு. இரண்டு வேளையும் வீட்டு வேலைக்கு வருவதற்கு ; அமுதாவிடம் பேசியாகிவிட்டது. சந்திரிகையின் உதவிக்கு ஊரிலிருந்து புவனா என்னும் பெண்ணை கூட்டி வந்தாயிற்று. வழக்கம் போல் சாவி கொடுத்த கடிகாரம் போல,எல்லாம் கச்சிதமாகத் தான் நடக்கிறது.
முதல் ஓரு மாதம், ஓயாது விஷயம் கேள்விப்பட்டு உற்றமும் சுற்றமும்; இவளைப் பார்க்க வந்து கொண்டே இருந்ததில், சந்திரிகைக்கு நேரம் போவதே தெரியவில்லை.பத்து வருடமாக இவளை சந்திக்காத மனிதர்களைப் பார்த்ததில் சந்திரிகை உற்சாகமாய் இருந்தாள்; என்றுதான் சொல்ல வேண்டும்.

வீட்டில் காலை 5.30 மணி காஃபியில் இருந்து இரவு எட்டு மணி சாப்பாடு வரை நேர்த்தியாய் இருந்தது. நான்தான் வீணாக வேண்டாத வேலை பார்த்துக் கொண்டிருந்தேனோ; எனறு நினைக்க ஆரம்பித்தாள்; சந்திரிகை. அவளுடைய நித்திய வேலைகள். பூஜை புனஸ்காரங்கள், ஸ்லோகங்கள் சொல்வதுதான் நின்றிருந்தது.
ஜெயராமன், " சந்திரிகை! ஸ்வாமி அலமாரி தூசியாய் மண்டி இருக்கு. நான் பூஜை செய்வதில்லை.அதனால் நிறைய படங்கள் விக்ரகங்களை எடுத்து அட்டைப்பெட்டியில் கட்டி வைத்து விட்டேன். உன் அறையிலேயே மீனாக்ஷி படமும் ஒரு சின்ன விளக்கும் வைத்து விடுகிறேன். உனக்கும் விளக்கேற்ற சுலபம். பாகிரதி மாமியின் உபயோகத்திற்கு அந்த அலமாரியை கொடுத்து விட்டேன்; என்றதும் அவள் கண்ணில் "மளுக்" என ஜலம் கட்டியது! ஆயினும் அவர் சொல்வதில் உள்ள யதார்த்தத்தை புரிந்து கொண்டாள்
இதற்கிடையே அமெரிக்காவிருந்து மனோகரனும் , மைதிலியும் வந்தது, ஆறுதலாக இருந்தது. எனினும் மூன்று வருடங்களாக வராத பிள்ளையும் , மாற்றுப்பெண்ணும் வந்தது அவளுக்கு கிலியாகத்தான் இருந்தது. பெண் சுமனும் மாப்பிள்ளை சேகரும் வந்திருந்தனர் எல்லோரும் கூடிக் கூடி பேசினர். அவர், ,குழந்தைகளிடம் வங்கிக் கணக்கை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்.
"சுமன் ,’அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம்! நாளை முதல் வேலையாக எங்கள் இருவரின் பெயரையும் லாக்கர் அக்கௌண்டிலும் மீதி வங்கிக் கணக்குகளிலும் நாமினியாக சேர்த்து விடுங்கள். அம்மாவிடம் கையெழுத்து மட்டும் வாங்கிக்கலாம். பேங்க்கில் கேட்டு கடிதம் எழுதிக்கலாம்", என்று சொல்ல, தற்போது இருக்கும் எதார்த்தமான நிலையை எண்ணி,மன அடக்கத்துடன், இறுதிக் கணம் வரும் வரை, மீதி நாட்களை சுமுகமாகக் கழிக்க வேண்டுமே; என்ற கவலை தான் சந்திரிகைக்கு மிஞ்சியது?!!
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு, மலர் வனம், சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)
எளிதில் மந்திரியாக எளிய வழி!
கண்தானம்!
Sunday Short story: எதார்த்தம்!
கவிதை வராவிட்டாலும் எழுது
தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!
கடவுள் ஏன் கல்லானார்?
Sunday Special: சாத்தூரில் சுவாரஸ்யம்.. 55 வயதில் குழந்தைகளாக மாறிய முன்னாள் மாணவர்கள்!
சுதந்திர தாகம் தணிந்து... சுதந்திர மோகம் எழுந்தது ஏனோ???
தீரமும் வீரமும் செறிந்த.. விடுதலை முழக்கம்.. சுதந்திரக் காற்றை சுவாசிக்க இந்தியா கடந்து வந்த பாதை!
{{comments.comment}}