காங்கிரஸ் செய்த தவறுகளைத் திருத்தவே எங்களுக்கு நேரம் போதவில்லை.. பிரதமர் மோடி

Feb 05, 2026,06:45 PM IST
டெல்லி: காங்கிரஸ் அரசுகள் செய்த தவறுகளைத் திருத்துவதிலேயே எங்களது நேரம் சரியாக இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று மாநிலங்களவையில் பதிலுரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:

வளர்ச்சியடைந்த நாடுகள் முதியவர்களைக் கொண்ட நாடுகளாக மாறி வரும் வேளையில், நம் நாடு இளைஞர்களைக் கொண்ட நாடாக மாறி வருகிறது. உலகின் மிக முக்கியமான திறமையாளர்களின் கூடாரங்களில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.

உலகளாவிய மோதல்களுக்கு மத்தியில் இந்தியா ஒரு நம்பிக்கையின் கதிராக உள்ளது. இந்தியர்களின் திறமை உலக நாடுகள் அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளன.



இந்தியா அதிக வளர்ச்சி மற்றும் குறைந்த பணவீக்கம் என்ற தனித்துவமான கலவையைக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் 'குளோபல் சவுத்' (தெற்குலக நாடுகள்) பற்றி பேசுகிறது, இந்தியா அந்த தெற்குலக நாடுகளின் குரலாக ஒலிக்கிறது. கடந்த காலங்களில் எந்த நாடும் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்யத் தயாராக இருக்கவில்லை. 

சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் (Reform, Perform, and Transform) என்ற வழிகாட்டும் கொள்கையுடன் நாம் முன்னேறியுள்ளோம். இதன் விளைவாக, நாடு இப்போது சீர்திருத்த எக்ஸ்பிரஸ் பாதையில் உள்ளது. கட்டமைப்பு, நடைமுறை மற்றும் கொள்கை ரீதியான சீர்திருத்தங்களை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம். உற்பத்தித் துறையை வலுப்படுத்துவதிலும், நமது தொழில்முனைவோருக்கு ஆதரவளிப்பதிலும் எங்களது முயற்சிகள் கவனம் செலுத்தியுள்ளன. இந்தியா இப்போது உலக அரங்கில் போட்டியிடத் தயாராக உள்ளது என்று என்னால் நம்பிக்கையுடன் கூற முடியும்.

மிகவும் வளர்ந்த நாடுகள் கூட தங்கள் நாடுகளிலிருந்து சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றி வருகின்றன. இருப்பினும், இங்கே, இந்த ஊடுருவல்காரர்களைப் பாதுகாக்க நீதிமன்றங்கள் மீது தேவையற்ற அழுத்தம் கொடுக்கப்படுகிறது... இந்த ஊடுருவல்காரர்கள் நமது இளைஞர்களின் உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் பறிக்கிறார்கள், மேலும் பழங்குடியின சமூகங்களுக்குச் சொந்தமான நிலங்களைக் கையகப்படுத்துகிறார்கள். அப்படியிருந்தும், இத்தகையவர்கள் இங்கு வந்து நமக்கு பாடம் எடுக்கிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தங்களுக்குப் பிறகு, இந்தியாவின் ஸ்திரத்தன்மை குறித்து உலகம் இன்று நம்பிக்கையுடன் இருக்கிறது. பல நாடுகள் இந்தியாவிடம் வர்த்தக ஒப்பந்தங்களைக் கோரி வருகின்றன.

தொலைநோக்குப் பார்வை் இல்லாத காங்கிரஸ்



முன்பெல்லாம் ஒரு ஒப்பந்தம் பற்றி பேசப்பட்டால் மக்கள் போஃபர்ஸைக் குறிப்பிடுவார்கள். காங்கிரஸிடம் புதிய யோசனைகளோ, தொலைநோக்குப் பார்வையோ அல்லது திட்டமோ இல்லை. அவர்கள் உருவாக்கிய குளறுபடிகளைச் சுத்தம் செய்வதிலேயே எங்களது முயற்சிகள் செலவாகின்றன.

ஒரு காலத்தில் பலவீனமான 5 பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்த இந்தியா, இப்போது உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற வேகமான பாதையில் உள்ளது என்றார் பிரதமர் மோடி.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி ராஜ்யசபாவில் பேசத் தொடங்கியதுமே தொடர்ந்து முழக்கங்களை எழுப்பிய எதிர்க்கட்சியினர், அதைப் பொருட்படுத்தாமல், பிரதமர் மோடி தனது உரையைத் தொடர்ந்தபோது வெளிநடப்பு செய்தனர்.  எதிர்க்கட்சித் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே நின்றபடி முழக்கமிட்டதைப் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி,  கார்கே வயதில் மூத்தவர். அவர் அமர்ந்து கொண்டே கோஷங்களை எழுப்பலாம் என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விட மாட்டோம்: சட்டசபையில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்!

news

சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சு...எக்ஸ்தளத்தில் கவுன்ட்டர் கொடுத்த உதயநிதி

news

உன் கண்ணில் நீர் வழிந்தால்!

news

நான் எழுதுவது கவிதையல்ல‌..!

news

Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?

news

Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!

news

FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்

news

பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!

news

கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!

அதிகம் பார்க்கும் செய்திகள்