உயிர் மூச்சு என்று நினைக்கின்ற என் உத்தமிக்கு அடியேன்!

Aug 07, 2026,02:49 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


கணவனே தனது 

உயிர் மூச்சு என்று 

நினைக்கின்ற என் 

உத்தமிக்கு அடியேன்! 


குணக்குன்றாய் 

நிற்கின்ற எந்தன் 

குணவதிக்கு 

அடியேன்! 


குலசாமி போல் 

என்னைக் காக்கின்ற

என்னவளுக்கு 

அடியேன்!




குழந்தையாய் எனைப்

பாவித்து வளர்க்கின்ற 

உன் தாய் உள்ளத்திற்கு 

அடியேன்! 


நிம்மதியே என் வாழ்வில் 

நிலைக்கட்டும் என வேண்டும் 

உன் பக்திக்கு 

அடியேன்! 


ஊர் உலகம் மெச்சும் படி 

எனை வாழவைக்கும் 

உந்தன் அன்பிற்கு 

அடியேன்! 


அடிமை போல் இருந்த என்னை 

அரசன் போல் வாழ வைக்கும் 

உந்தன் நல்ல மனதிற்கு 

அடியேன்!


எந்தன் உயிர் உள்ளவரை 

உனக்கு நன்றி சொல்ல 

எனைப் படைத்த இறைவனுக்கும் 

அடியேன்! 


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலையங்கம்: நாட்டின் பாதுகாப்பில் பெண்மையின் பேராற்றல்.. CRPF Women Battalion turns 40!

news

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து சிக்கும் நபர்கள்... தீவிரமடையும் விசாரணை

news

பிரே பண்ணிட்டு சாப்பிடுவோமா?.. நீட்டிக்கப்பட்ட காலை உணவுத் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

news

திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி

news

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் "கை சுத்தமில்லை"...கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் பதில் மனு தாக்கல்

news

ஆசிய விளையாட்டு போட்டி 2026: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை

news

Short story by Joseph Samraj: செதுக்குமுத்து!

news

ஜப்பானுக்கு எதிரான டி20 போட்டி: 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி

news

சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மனு தள்ளுபடி

அதிகம் பார்க்கும் செய்திகள்