சிவபெருமானின் முழு அருளை பெற இந்நன்நாளை தவற விடாதீர்கள்
- பக்தித்தென்றல் பாவை.பு
சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் இணைவது தான் அமாவாசை திதியாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. அமாவாசைக்கு மூன்றாம் நாள் (துவிதியை திதியை) அன்று தான் நிலவு தெரியும்.. அந்த சந்திர வெளிச்சம் அழகாகவும் பிரகாசமாகவும் இருக்கும். இதற்கு முன்பாக 6 மணியளவில் தோன்றுவதே பிறையாகும்.
வளர்பிறை யாக தனது பயணத்தை துவங்கும் இச்சந்திரனே...... சிவபெருமான் தன் சடாமுடியில் பிறை சந்திரனாக சூடி சந்திரமௌலிஸ்வரராக காட்சி தருகிறார்.
சிவபெருமானை கோவில் சென்று தரிசிக்க முடியாதவர்கள்.. ஒவ்வொரு மாத பிறை அன்றும் மாலை 6 மணியளவில் அனைவருக்கும் காட்சி தருகிறார் சாட்சாத் பரமேஸ்வரனாக. சந்திரனே நம் மனதிற்கு அதிபதியாவர். நமது சிந்தனை செயல் கற்பனை மற்றும் நமது எண்ணங்களை தூண்டுபவரும் அவரே கட்டுப்படுத்துபவரும் அவரே.. அதாவது வளர்பிறை தேய்பிறை போல் .நல்லது தீயதுமாக இருப்பதற்கும் காரணகர்த்தா இந்த சந்திரனே.
இந்த சந்திரனை பிறை அன்று தரிசிப்பது பேரானந்தம், மன நிம்மதி, ஆரோக்கியம், அதிர்ஷ்டம், வம்ச விருத்தி, பொருளாதார வளர்ச்சி கிடைக்கும் .. துன்பம் கவலை போராட்டம் வருத்தம் தரித்திரம் நீங்கும்.. நல்ல திருமண வாழ்வு அமைவதற்கும், கணவன் மனைவி கருத்து வேறுபாடு நீக்குவதற்கும், பிள்ளைகள் நல்லவர்களாக வளர்வதற்கும் சந்திரனே காரகன். அவனை பிடியுங்கள் தரிசியுங்கள், வாழ்வில் வளம் பெறுங்கள்.
தொடர்ச்சியாக மூன்று முறை எவறொருவர் மூன்றாம் பிறை சந்திரனை வானில் வெறும் கண்களால் தரிசனம் செய்கிராரோ ( கர்மா பார்க்க விடாது) அப்படி ஒரு விதி இருந்தால் அவர் சிவகதி (மீண்டும் பிறவாமல் பிறவி சுழற்சியிலிருந்து விடுபட்டு சிவனின் திருவடிகளை அடைவது) மோட்சம் கிட்டு, செல்வம் சேரும், பணத்திற்கு பஞ்சம் வராது.
இந்த வருடம் முதல் சந்திர தரிசனம் ஜனவரி 20.1.1026 செவ்வாய் கிழமை அன்று மாலை 5.45 முதல் 7.15க்குள் நிகழவுள்ளது. இவ்வளவு சிறப்பு மிக்க இந் நன்நாளை யாரும் தவறவிடாதீர்கள்.. இல்லங்களில் இருந்தபடியே சிவ பேரினை நமக்கு வழங்க நம் பெருமான் காத்துக்கொண்டு இருக்கிறார். அவனருளால் அவனை வணங்குவோம் அவனருள் பெறுவோம் .
பித்தா பிறை சூடி பெருமானே
அருளாளா எத்தான் மறவாதே
நினைக்கின்றேன் மனதுன்னை. (பித்தனே பிறையை கண்ணியாக தலையில் சூடியவனே எனது நெஞ்சத்துள் உன்னை அகலாது வைத்தருளினாய்) என்று சிவபெருமானை பிறைசூடியவனாகவே தனது முதல் தேவார பாடலிலேயே குறிப்பிடுகிறார் சுந்தரர்.
"ஓம் சந்திர மெளலீஸ்வராய நமஹ"
என்று வானில் தெரியும் பிறையை பார்த்து 108,1008 எண்ணிக்கையில் சொல்லி அம்மையும் அப்பனும் சூடிய பிறை சந்திரனை வழிபடுங்கள், வாழ்வின் இருளில் இருந்து விடுபடுங்கள்.