- ஸ்வர்ணலட்சுமி
பஞ்சமி என்பது மாதந்தோறும் வளர்பிறை ஐந்தாம் நாளும், தேய்பிறை ஐந்தாம் நாள் வரும் திதி ஆகும். ஒவ்வொரு திதியும் பல்வேறு சிற்பம்சங்கள் நிறைந்தது. எனினும் பஞ்சமி திதியில் வரும் "வசந்த பஞ்சமி " மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.
மிகவும் விசேஷமான பஞ்சமி யாதெனில் கருட பஞ்சமி, ரிஷி பஞ்சமி, வசந்த பஞ்சமி ஆகும்.
கருட பஞ்சமி :

தட்சிணாயன காலத்தில் வளர்பிறை பஞ்சமியில் சூரியன் பயணிப்பார். ஆடி அமாவாசை அடுத்து வருகின்ற பஞ்சமி திதி கருட பஞ்சமி ஆகும். இது காஷ் ய பர்,வினதை தம்பதிகளுக்கு கருடன் பிறந்த தினமாகும். இந்த நாளில் திருமாலின் வாகனமான கருடனை வணங்குவது சிறப்பானது.
ரிஷி பஞ்சமி :
புரட்டாசி மாதம் வரும் வளர்பிறை பஞ்சமிக்கு ரிஷி பஞ்சமி "என்று பெயர்.
வசந்த பஞ்சமி :
உத்தராயன காலத்தில் தொடக்க மாதமான தை மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமி திதி யை "வசந்த பஞ்சமி" என்று அழைப்பார்கள். இந்த ஆண்டு( 2026)வசந்த பஞ்சமி ஜனவரி மாதம் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த நாள் வசந்த காலத்தின் தொடக்கத்தை குறிக்கும் நன்னாளாகும். இந்த நன்னாளில் சரஸ்வதி தேவியை வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். வட இந்தியாவில் இந்த வசந்த பஞ்சமி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வசந்த பஞ்சமி நாளில் மஞ்சள் நிற ஆடைகள் அணிந்து சரஸ்வதிதேவியை வணங்குவார்கள்.
வசந்த பஞ்சமி வசந்த காலத்தின் வருகையை அறிவித்து புதுப்பொலிவையும், ஞானத்தையும் கொண்டுவரும் நன்னாளாக கருதப்படுகிறது.
வசந்த பஞ்சமி கொண்டாடும் முறை :
மஞ்சள் நிற ஆடைகள் அணிந்து,மஞ்சள் நிற பொருட்களை சரஸ்வதி தேவிக்கு படையல் படைத்து,சரஸ்வதி தேவி யந்திரம் வரைந்து, ஸ்லோகங்கள் படித்து வழிபாடு செய்வார்கள்.
கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியின் அருகில் புத்தகங்கள், இசைக்கருவிகள் போன்றவற்றை வைத்து, வணங்கி வழிபாடு செய்வார்கள்.
சரஸ்வதி தேவிக்கு பிடித்தமான இனிப்புகள், பழங்கள் நைவேத்தியமாக வைத்து, தீப தூப ஆராதனைகள் செய்வர். பகவான் கிருஷ்ணன் தன் இளம் வயதில் சாந் தீபனி முனிவரிடம் கல்வியை கற்றுக் கொள்ள குருகுல வாசம் தொடங்கிய மிக சிறப்பு வாய்ந்த நாளாகும். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த நாளில் கல்வி கடவுள் சரஸ்வதி தேவியை வழிபாடுகள் செய்ய அனைத்து வகையான கலைகளும் நம் வசப்படும் என்பது ஐதீகம். ஞானம் பெருகும். ஆன்மீகத்தில் உயர்நிலை பெறலாம்.உள்ளத்தில் இருக்கும் அஞ்ஞானம் நீங்கி,ஞான ஒளி தோன்றி வசந்தம் வீசும்.
சரஸ்வதி தேவியின் பெயர்கள் பல.. ஞானவாகினி, காயத்ரி, சாரதா, வெண்தாமரையாள், ஞானக்கொழுந்து, ஆதி காரணி, சகலகலாவல்லி, வாணி,பாமகள், பிராமி என்ன பல பெயர்கள் உடையவள் கலைமகள்.
மேலும் வசந்த பஞ்சமியின் சிறப்புகளை பற்றி அடுத்த பதிவிலும் காணலாம். இதுபோன்ற சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
மகா சக்தி நீ…!
கரூர் வழக்கு.. டெல்லி சிபிஐ விசாரணையில் நடப்பது என்ன.. விஜய்யிடம் கேட்கப்படும் கேள்விகள் என்னென்ன?
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.. இதுவரை 12.80 லட்சம் பேர் மனு
மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் தெறி ரீ ரிலீஸ்...காரணம் இது தானா?
71 மாவட்டங்களுக்கும் தலைவர்கள்.. ஒரு வழியாக அறிவித்தது காங்கிரஸ்!
2026ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம்.. நாளை கூடுகிறது.. ஆளுநர் உரையாற்றுவாரா?
அடுத்த திட்டம் என்ன?...ஆதரவாளர்களுடன் சசிகலா தீவிர ஆலோசனை
சத்தம் போடாமல் சரித்திரம்.. Ultimate Women – Homemakers
டிக் டிக் டிக்!
{{comments.comment}}