எங்க வீட்டுக் குலதெய்வம் வீரப்பன்.. செம்மண்ணை எடுத்து வந்து.. 25 பிள்ளையார் பிடித்து!

Mar 09, 2026,11:15 AM IST

- கலைவாணி ராமு


புதுச்சேரி: குலதெய்வ வழிபாடு என்பது தமிழர்களின் பாரம்பரியம். கலாச்சாரம், பக்தி. இன்றளவும் குலதெய்வ வழிபாடு தமிழ்நாட்டில் தொன்று தொட்டு அதே பாரம்பரியத்துடன் தொடர்ந்து வருகிறது. அப்படிப்பட்ட குல தெய்வ வழிபாடு குறித்து கலைவாணி ராமு எழுதியுள்ள அனுபவக் கட்டுரை இது.


என் வீட்டு குல தெய்வத்தை பற்றி சில வரிகள் எழுதுகிறேன். எங்கள் வீட்டுக் குல தெய்வத்தின் பெயர் வீரப்பன். வீரப்பன் சாமி கும்பிடுவது எங்கள் முன்னோர்களின் ஐதீகமாக இருந்தது. கோவில்களில் இருந்து செம்மண் எடுத்து வரப்பட்டு அந்த செம்மண்ணை பதப்படுத்தி 25 பிள்ளையார் பிடிப்போம். மீதம் இருக்கும் அனைத்து மண்ணையும் ஒருசேர பிசைந்து பெரிய பிள்ளையாராக பிடித்து அந்தப் பெரிய பிள்ளையாரை வீரப்பனாக பாவித்து கட்டமாக பிள்ளையார்களை வைப்போம்.


ஒருவரிக்கு ஏழு பிள்ளையார் வீதம் 3 பக்க வாட்டத்திலும் வைத்துவிட்டு முன் பக்கம் 4 சின்ன விநாயகர் வைத்துவிட்டு பெரியதாக வீரப்பனை ஆவாகனம் செய்வோம். செய்து முடித்த பின்பு பால் தயிர் சந்தனம் அபிஷேக பொடி பன்னீர் இவைகளால் அபிஷேகம் செய்து பூக்களால் அலங்கரித்து மாலைகள் சூடி கோலமிட்டு சாமி அலங்காரம் செய்த இடத்திற்கு எதிராக கல் மூட்டி பொங்கல் வைத்து ஒன்பது வகை தீபங்கள் ஏற்றி வண்ண விளக்குகளால் அலங்கரித்து மொத்தம் சின்ன விநாயகர் 26க்கும் தனித்தயாக  வெற்றிலை பாக்கு பொங்கல் பொங்கல் மேல் தயிர் வாழைப்பழம் வெள்ளம் அனைத்தும் வைத்து வீரப்பனுக்கு தேவையான அடை தடி இவைகளை அரிசி மாவால் செய்து இலைகளில் பரிமாறுவோம்.




வீரப்பனுக்கே உரிய கருவாடும் சுட்டு வைப்போம். சாராயம் சுருட்டு இவைகளையும் வைத்து பக்தி பரவசத்தோடு படையல் இட்டு மகிழ்வோம். இந்த பூஜை வருடத்திற்கு ஒரு முறை மாட்டுப் பொங்கல் அன்று மட்டுமே கொண்டாடப்படுகிறது. மற்றும் வீட்டில் பிறந்த ஆண் குழந்தைகளின் திருமணத்தின் பொழுதும் ஆண் குழந்தைகளின் வாரிசுகள் காதணி விழாவின் பொழுதும் இந்த பூஜை நடைபெறுவது எங்கள் குல வழக்கம்.


அந்த சமயம் எங்கள் பந்துக்களை எல்லாம் அழைத்து அசைவ விருந்து கொடுத்து ஆனந்த மகிழ்ச்சி உடன் பக்தி பரவசத்துடனும் கொண்டாடி மகிழ்வோம். மூன்று நாட்கள் காலை மாலை இரண்டு  வேலையும் பூஜை செய்வோம் .மூன்றாம் நாள்  அனைத்து விநாயகரையும் வீரப்பனையும் ஒன்று சேர்த்து ஒன்றாகப் பிசைந்து ஒரே ஒரு வடிவமாக செய்து வைத்து விடுவோம். பூஜை நாட்களில் அப்படியே சுத்தம் செய்து அலங்காரம் செய்து படைத்து விடுவோம்.


வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே அந்த மண்ணையே  பிசைந்து மீண்டும் பூஜைக்கு பயன்படுத்துவோம். எங்கள் வேண்டுதலை எங்கள் வீரப்பன் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையில் நாங்கள் வாழ்ந்து வருகிறோம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாமக விவகாரம்...ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அன்புமணி மனு

news

ஜனநாயகன் ரிலீசுக்கு மீண்டும் சிக்கல்...படத்தின் மறுஆய்வு தள்ளிவைப்பு

news

நண்டு சாப்பிடுவீங்களா?.. அப்படீன்னா கிட்ட வாங்க.. உங்களுக்குத்தான் இந்த செய்தி!

news

எங்க வீட்டுக் குலதெய்வம் வீரப்பன்.. செம்மண்ணை எடுத்து வந்து.. 25 பிள்ளையார் பிடித்து!

news

அறிவுக்கும் ஒரு திருக்கோவில் இருக்கு.. ஆழியாறு போனா இதை மறக்காதீங்க!

news

கோப்பையை ராகுல் டிராவிட், லட்சுமணுக்கு அர்ப்பணிக்கிறேன்.. கெளதம் கம்பீர் நெகிழ்ச்சி

news

தோல்விகள் பாடங்களைக் கற்பிக்கலாம்,.. ஆனால் வெற்றிகள் மட்டுமே வரலாற்றை எழுதும்!

news

India T20 World Cup Champion: அகமதாபாத்தில் புதிய வரலாறு.. 3வது டி 20 உலகக் கோப்பையை வென்றது இந்தியா

news

T20 Cricket World Cup Finals: அகமதாபாத்தை அதிர விட்ட இந்தியா.. அடுத்தடுத்து பல உலக சாதனைகள் காலி!

அதிகம் பார்க்கும் செய்திகள்