அபிலாஷைகளை நிறைவேற்றும் அபிஜித் வழிபாடு!

Jan 19, 2026,10:59 AM IST

- பக்தித்தென்றல் பாவை.பு


அபிஜித் என்பது வெற்றியாளர் என்று பொருள். ஜோதிடத்தில் வரும் 27 நட்சத்திரங்களுக்கு மத்தியில் 28 ஆவது சூட்சும நட்சத்திரமாகும். இது உத்திராடத்திற்கும் திருவோணத்திற்கும் இடையில் இணையும் பகுதியே அபிஜித் முகூர்த்தமாகும். 


தினந்தோறும் உச்சி நேரம் மதியம் 11.45-12.15 க்குள் வருவது அபிஜித் முகூர்த்தம்,  மாதம் ஒரு முறை குறிப்பிட்ட நேரத்தில் வருவது அபிஜித் நட்சத்திரம். இந்த நாளில் சில நிமிடங்களே சந்திரன் அபிஜித் நட்சத்திரத்தில் இருப்பதால், இந்த நட்சத்திரத்தில் பிறப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதிஷ்டம் இருந்தால் மட்டுமே இந்நன்னாலில் பிறப்பெடுக்க முடியும். 




அபிஜித் நட்சத்திரம் ஒளி மிகுந்தது, இந்த  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் பெறும் முன்னேற்றம் பெறுபவர்களாக இருப்பார்கள், வாழ்வில் தடையில்லா கல்வி, உயர் நிலை, சமுகத்தில் பெரிய அந்தஸ்துடன் கூடிய மரியாதை, அரசர் போல் வாழ்வு, இவர்கள் எங்கே இருந்தாலும் ஒரு தனித்தன்மையுடன் இருப்பார்கள், இயற்கையாகவே இவர்களிடம் தலைமைப்பண்பு இருக்கும். 


இந்த முகூர்த்த நேரத்திற்கு தோஷம் கிடையாது, ராகு காலம், எமகண்டம், அஷ்டமி, நவமி, தேய்பிறை,பாட்டிமுகம் போன்ற எதுவும் இதற்கு கிடையாது. 


இந்த நேரத்தில் தொடங்கப்படும் புதிய முயற்சிகள், தொழில்கள் பெறும்வெற்றி பெரும்.  எந்த நல்ல காரியத்தை யும் தாராளமாக செய்யலாம். 


மஹாபாரதத்தில் பாரத போர் தொடங்கும் முன், சகுனி துச்சாதனனை அழைத்து நீ சகாதேவனிடம் சென்று எந்த நேரத்தில் போர் தொடங்கினால் வெற்றி பெறுவோம் என்று நேரம் குறித்து வர அனுப்பி வைத்தார். 

ஜோதிடத்தில் மாபெரும் ஞானியான சகாதேவன் வந்தவர்கள் எதிரிகளாக இருந்தாலும் ஜோதிட சாஸ்திரப்படி உண்மையை மறைக்காமல் அவர்கள் வெற்றி பெரும் வகையில் ஒரு நாளை குறித்து கொடுத்தார். அந்த நாளே அபிஜித் நட்சத்திரம் தோன்றும் நாளாகும். 


இதை பார்த்து கொண்டு இருந்த முக்காலமும் அறிந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அபிஜித் நட்சத்திரதம் வரும் நாளில் அதை தனது மயிலிறகில் மறைத்து வைத்திருந்தார். போர் தொடங்கும் நேரத்தில் அபிஜித் நட்சத்திரம் இல்லாமல் போகவே பாரத போரில் கெளரவர்கள் தோற்றார்கள் என்கிறது பாரதம். தேவர்கள் கேட்டதினங்க மாதம் ஒரு நாளில் அபிஜித் நட்சத்திரம் தெரியும்படி விடுவித்தார். 


பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே அபிஜித் நட்சத்திரத்தின் மகத்துவத்தை அறிந்து மறைத்து வைத்திருந்தார் என்றால் அதன் மகத்துவம் எவ்வளவு சிறப்புக்குரியதாக இருக்கும். 


இந்த மாதத்தில் மிக விசேஷமாக அபிஜித் நட்சத்திரமும், அபிஜித் முகூர்த்தமும் இனைந்து வருகிறது. இந்த நேரத்தை தவறவிடாமல் நற்காரியங்களைச் செய்ய தொடங்க பயன்படுத்தி கொள்ளுங்கள். 

 

அபிஜித் நட்சத்திரம் ஜனவரி 19.2026 பகல் 11.41 முதல் 12.6 வரையிலும்  அபிஜித் முகூர்த்தம் பகல் 11.45முதல்  2.15வரையிலும் உள்ளது   இந்த நேரத்தில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து நமது ஞாயமான ஆசைகள் நிறைவேற வேண்டி வேண்ட வேண்டுதல்களை நிறைவேற்றும் இந்த அபிஜித் நட்சத்திரம். 


 ஸ்ரீ அபிஜித் தாய நமக  ஸ்ரீ விஷ்ணு வே நமக  என்று மனமுருகி 108 முறை சொல்லி வழிபடுவது சிறப்பை தரும். 

அனைவரும் இந்த அபிஜித் நட்சத்திரத்தை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.. இதுவரை 12.80 லட்சம் பேர் மனு

news

அபிலாஷைகளை நிறைவேற்றும் அபிஜித் வழிபாடு!

news

71 மாவட்டங்களுக்கும் தலைவர்கள்.. ஒரு வழியாக அறிவித்தது காங்கிரஸ்!

news

மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் தெறி ரீ ரிலீஸ்...காரணம் இது தானா?

news

பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் மக்கள்...5 கி.மீ.,க்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

news

இன்று டில்லி சிபிஐ அலுவலகத்தில் 2வது முறையாக ஆஜராகிறார் விஜய்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்